Raayan movie: அடங்காத அசுரன் தனுஷ்.. சிறப்பான தருணங்கள்.. என்னமா எடுத்திருக்காங்க!
சென்னை: நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டவர்களுடன் இணைந்து தற்போது குபேரா படத்தில் சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படம் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது. தொடர்ந்து இம்மாதம் ரிலீசாகும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்தது.
தற்போது ராயன் படத்தின் ரிலீஸ் ஜூலை 26ம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. படத்தில் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் அடுத்தடுத்த சிங்கிள்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் தனுஷின் டைட்டில் பாடலாக அடங்காத அசுரா வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷின் ராயன் படம் வரும் ஜூலை மாதம் 26ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ப பாண்டி படத்தை தொடர்ந்து நீண்ட காலங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள படம் ராயன். வடசென்னையை கதைக்களமாக கொண்டு கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. இந்தப் படம் அடுத்தடுத்து ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு தற்போது ஜூலை மாதம் 26ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராயன் படம்: இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏஆர் ரகுமான் இசையில் இந்த படத்தில் அடுத்தடுத்த பாடல்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியான அடங்காத அசுரன் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் அழகான தருணங்களை சன் பிக்சர்ஸ் தற்போது தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் பிரபு தேவா ஆடலை கொடுக்க பாடலுக்கு ஏஆர் ரஹ்மான் உத்திரவாதம் மேற்கொண்டுள்ளார். இவர்களின் ஆடலும் பாடலும் தனுஷின் மேற்பார்வையில் அரங்கேறி இருந்ததை இந்த ஷூட்டிங் வீடியோ வெளிப்படுத்தியுள்ளது.
சூட்டிங் ஸ்பாட் வீடியோ: தனுஷின் அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் ராயன் படம் உருவாகியுள்ள சூழலில் அடங்காத அசுரன் பாடல் அவரது கேரக்டரின் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த பாடலின் துஷாரா விஜயன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் இணைந்துள்ளனர். மேலும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலுக்காக ரிகர்சலும் எடுக்கப்பட்டதை இந்த சூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளிப்படுத்தியுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் இந்த மாதமே திட்டமிடப்பட்டிருந்த சூழலில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் ஜூலை மாதத்திற்கு தள்ளி போயுள்ளது.
கேங்ஸ்டர் கதைக்களம்: படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும் இந்த படம் மிகப்பெரிய கேங்ஸ்டர் அனுபவத்தை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர். தற்போது தனுஷ், சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் இம்மாதத்துடன் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் மாற்றி மாற்றி இந்த படத்தின் ஷூட்டிங் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் தனுசுடன் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்தப் படமும் கேங்ஸ்டர் கதைக்களத்திலேயே உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











