Actor Dhanush: வட சென்னை படத்திற்கு பிறகு தனுஷ் சந்தித்த சிக்கல்?.. ராயன் சென்சார் விவகாரம்!

சென்னை: நடிகர் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் நீண்ட காலங்களுக்கு பிறகு உருவாகியுள்ள ராயன் படம் வரும் 26ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படம் வடசென்னையை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரிலீசுக்கு தயாராகியுள்ளது ராயன் படம்.

படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இணைந்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் குடும்ப செண்டிமெண்டையும் இணைத்து இந்த படத்தை தனுஷ் உருவாக்கியுள்ள நிலையில் படத்திற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Dhanush Raayan Sun pictures tamil cinema

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷின் ராயன் படம் இன்னும் சில தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரத்தை இந்தப் படத்தின்மூலம் மீண்டும் கையில் எடுத்துள்ளார் தனுஷ். வடசென்னையை மையமாக கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் ராயன் படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இதே கதைகளத்தில் முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் தனுஷ் எதிர்கொண்ட அதே விஷயத்தை ராயன் படத்திலும் தற்போது மீண்டும் எதிர்கொண்டுள்ளார். வடசென்னை படத்தில் மிக அதிகமான வன்முறை காட்சிகள் இருந்ததாக கூறி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது.

Dhanush Raayan Sun pictures tamil cinema

ராயன் சென்சார்: இந்நிலையில் தற்போது ராயன் படத்திலும் அதே விஷயத்தை எதிர்கொண்டுள்ளார் தனுஷ். இந்த படத்திலும் அதிகமான வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்திற்கும் சென்சார் போர்ட் தற்போது ஏ சான்றிதழை வழங்கி உள்ளனர். படத்தின் சில காட்சிகளை மாற்றியமைக்கும்படியும் அப்படி செய்தால் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கலாம் என்றும் சென்சார் போர்ட் அதிகாரிகள் தெரிவித்த நிலையில் படத்தை பார்த்த தயாரிப்பாளர் கலாநிதிமாறன் இந்த படம் மிகச் சிறப்பாக வந்துள்ளதாகவும் அதனால் இதை மாற்ற வேண்டாம் என்றும் கூறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தடுத்த படங்கள்: டிவியில் இந்த படம் வெளியாகும் போது சில மாற்றங்களை சந்திக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து மீண்டும் குபேரா பட சூட்டிங்கில் இணைந்துள்ளார் தனுஷ். இந்த படத்தின் ஷூட்டிங்கை இம்மாதத்திற்குள் நிறைவு செய்துவிட்டு அடுத்தடுத்த படங்களில் இணையவுள்ளார் தனுஷ். இந்நிலையில் ராயன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகவுள்ளது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.

மீண்டும் இயக்கம்: முற்றிலும் இளைஞர்களை மையமாகக் கொண்டு காதல் படமாக உருவாகிவரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் தனுஷ் மற்றும் சரத்குமார் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வருகிறது. தொடர்ந்து பாலிவுட்டிலும் அடுத்த படத்தில் தனுஷ் இணையவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X