Raayan: இசைப்புயல் இசையமைக்க.. நடனப்புயல் ஸ்டெப்ஸ் போட.. வெளியாக இருக்கு ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
சென்னை: நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் அவரது ரசிகர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்து வருகின்றன. திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ள தனுஷ், தற்போது சேகர் கம்மூலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு முன்னதாக தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் இரு படங்களை முடித்துள்ளார் தனுஷ். இதில் ராயன் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படத்தில் தனுஷ் கேமியோ ரோலில் நடித்துள்ள நிலையில் அவருக்கு தம்பிகளாக சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் படத்தில் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா முரளி ஆகியோரும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் தன்னுடைய இயல்பான மற்றும் மாஸான நடிப்பால் தான் ஏற்கும் கேரக்டர்களை சிறப்பாக்குவதில் வல்லவராக காணப்படுகிறது. அவரது அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகின்றன. திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ள தனுஷ், தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் இம்மாதத்தில் நிறைவடையவுள்ளதாக கூறப்படும் நிலையில், படம் இந்த ஆண்டிலேயே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து 4 படங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ராயன் படம்: முன்னதாக தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்கள் உருவாகியுள்ளன. இதில் ராயன் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிக்கப்பட உள்ள நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அடுத்தமாதம் 2வது வாரத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் நடிகர் தனுஷின் கேரக்டர் பெயரும் தற்போது வெளியாகியுள்ளது. அவரது கேரக்டர் பெயர் காத்தவராயன் என்று கூறப்பட்டுள்ளது.
ஏஆர் ரஹ்மான் இசை: படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் சூழலில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்து ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே மே மாதம் 2வது வாரத்தில் வெளியாகவுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு நடனப்புயல் பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இந்தப் பாடலை தனுஷே பாடியுள்ளதாகவும் இந்தப் பாடலுக்காக 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரபுதேவா நடனம்: இசைப்புயல் இசையமைக்க, நடனப்புயல் ஸ்டெப்ஸ் போட தனுஷ் பாட இந்தப் பாடல் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் தற்போதே யோசிக்க ஆரம்பித்துள்ளனர். இந்தப் படத்தில் கேமியோ கேரக்டரில் தனுஷ் நடித்துள்ளார். அதனால் அவரது போர்ஷன்கள் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவுக்கடை நடத்திவரும் தனுஷின் ப்ளாஷ்பேக்கில் அவர் கேங்ஸ்டராக இருப்பதாக படத்தின் கதைக்களம் காணப்டுவதாக கூறப்பட்டுள்ளது. ப பாண்டி படம் தனுஷ் இயக்கத்தில், இளமை காதலர்கள், முதுமையில் சந்திக்க நேர்ந்தால் என்னவாகும் என்பதாக இருந்தது. ரசிகர்களையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











