Actor Dhanush: ரிலீசுக்கு தயாராகும் தனுஷின் ராயன் படம்.. இசை வெளியீடு எப்ப தெரியுமா?

சென்னை: நடிகர் தனுஷ் ப பாண்டி படத்தை தொடர்ந்து நீண்ட காலங்களுக்குப் பிறகு தற்போது ராயன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே நிறைவடைந்த சூழலில் ஏப்ரல் மாதத்திலேயே படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இடையில் நாடாளுமன்ற தேர்தல் வந்ததால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் வரும் ஜூன் மாதம் 13ம் தேதி இந்தப்படம் ரிலீசாகவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஏஆர் ரகுமான் இசையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் தனுசுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், அபர்ணா முரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ள சூழலில் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Actor Dhanush s Raayan movie music launch date update is here

நடிகர் தனுஷ்: தனுஷ் நீண்ட காலங்களுக்கு பிறகு இயக்கியுள்ள படம் ராயன். இந்தப்படத்தில் தனுஷ் நடிக்கவும் செய்துள்ளார். படத்தில் அவருடன் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், சரவணன், பிரகாஷ்ராஜ், அபர்ணா முரளி, துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். எப்போதும் தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தொடர்ந்து நடித்து வரும் தனுஷ், இந்தப் படத்தில் அவரை இயக்கியுள்ளார். இந்த விஷயம் மிகச் சிறப்பாக பார்க்கப்படுகிறது. படத்தில் செல்வராகவனின் கேரக்டர் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாஸ் காட்டிய ஃபர்ஸ்ட் சிங்கிள்: இந்தப் படம் வரும் ஜூன் மாதம் 13ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏஆர் ரகுமான் இசையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனிடையே, படத்தின் இசை வெளியீடு வரும் ஜூன் மாதம் 1ம் தேதி சென்னையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து விரைவில் படக்குழுவினர் அறிவிப்பு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்த அப்டேட்கள்: முன்னதாக இந்தியன் 2 படம் ஜூன் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட சூழலில் ராயன் படத்தின் ரிலீஸ் ஜூலை மாதத்திற்கு தள்ளிப் போக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பாடல் காட்சி சூட்டிங் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் ஜூலை மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில் மிகப்பெரிய படங்கள் ரிலீஸ் எதுவும் இல்லாத ஜூன் மாதத்தை ராயன் படம் சிறப்பாக பயன்படுத்தியுள்ளது. வரும் ஜூன் 13ம் தேதி இந்த படம் ரிலீசாகவுள்ள சூழலில் அடுத்தடுத்து படத்தின் இரண்டாவது சிங்கிள், ட்ரெய்லர் உள்ளிட்டவை வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

கேங்ஸ்டர் கதைக்களம்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சிறப்பான ப்ரொமோஷன்களும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் ஏராளமான நடிகர் நடிகைகள் இணைந்துள்ள சூழலில் படத்தின் ப்ரோமோஷன்களுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறலாம். தனுஷ் இயக்கத்தில் வெளியான ப பாண்டி படத்தில் வயதான நபரின் வாழ்க்கை பிரச்சினைகள், அவரது இளம் வயது காதல் உள்ளிட்டவற்றை மையமாக கொண்டு திரைக்கதையை அமைத்திருந்தார் தனுஷ். இந்நிலையில் தற்போது ராயன் படத்தில் அவர் கேங்ஸ்டர் கதைக்களத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X