Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து வெற்றிப்பட கூட்டணிகளில் தன்னை இணைத்துக்கொண்டு நடித்து வருகிறார். தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களை இயக்கியுள்ளார். இதில் ராயன் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராயன் படம் உருவாகியுள்ள சூழலில் தன்னுடைய வொண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை தயாரித்து வருகிறார். இதில் ராயன் படம் ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. இந்தப் படங்களை இயக்கியுள்ளதுடன் கேமியோ கேரக்டர்களிலும் தனுஷ் நடித்துள்ளார்.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து வெற்றிப்பட கூட்டணியில் இணைந்து திருச்சிற்றம்பலம். வாத்தி. மற்றும் கேப்டன் மில்லர் என ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப்படம் மும்பையை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் இணைவதற்கு முன்னதாக ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ளார் தனுஷ்.
ராயன் படம்: இதில் ராயன் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்தப்படம் ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாக உள்ளதாக முன்னதாக கூறப்பட்ட சூழலில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் மே மாதத்திற்கு தள்ளிப் போவதாக கூறப்பட்டது. இந்தப் படம் மே மாத இறுதியில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்ட சூழலில் தற்போது படம் ஜூலை மாதத்திற்கு ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் ரிலீசாக உள்ள சூழலில் அந்த படம் தொடர்ந்து மூன்று வாரங்களாவது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தள்ளிப்போகும் ராயன் ரிலீஸ்: இதையடுத்து ராயன் படத்தின் ரிலீஸ் தேதியை ஜூலை மாதத்திற்கு படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையொட்டி இந்தப் படத்தின் ப்ரொமோஷன்கள் ஜூன் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து ட்ரெய்லர், இசை வெளியீடு போன்றவை வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். ப பாண்டி படத்திற்கு பிறகு ராயன் படத்தை இயக்கி முடித்துள்ளார் தனுஷ். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், அபர்ணா முரளி, துஷாரா விஜயன் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
போஸ்டர் திருவிழா: முன்னதாக படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. போஸ்டர் திருவிழாவாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகர்களின் போஸ்டர்களை வெளியிட்டு மாஸ் காட்டினார் தனுஷ். இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் தனுஷின் தம்பிகளாக நடித்துள்ளனர். படத்தில் ரோட்டோர கடை நடத்துபவராக தனுஷ் காணப்படும் சூழலில், அவரது பிளாஷ்பேக் அவரது குடும்பத்தினருக்கு தெரியவரும்போது ஏற்படும் அதிர்ச்சியை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











