Actor Dhanush: தனுஷின் ராயன் படத்தின் ரிலீஸ் தேதி இதுவா.. காத்திருக்கும் ரசிகர்கள்!
சென்னை நடிகர் தனுஷ் தன்னுடைய நடிப்பாலும் பன்முகத் திறமையாலும் ஏராளமான ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகின்றன. அந்த வகையில் திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என அடுத்தடுத்த அதிரடி திரைப்படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பட வரிசையில் இணைந்துள்ளன. இந்நிலையில் தனுஷின் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் படம் ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகும் என்று முன்னதாக கூறப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி இந்தப்படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளிப் போய் உள்ளது.
தனுஷ் இயக்கத்தில் கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் தனுஷ் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் தனுஷின் தம்பிகளாக நடித்துள்ளனர். மேலும் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டருடன் அடுத்தடுத்த கேரக்டர்களின் போஸ்டர்களையும் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு தனுஷ் மாஸ் காட்டினார்.

நடிகர் தனுஷ்: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறமையை காட்டி வருகிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வித்தியாசமான ஜானரில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. சர்வதேச அளவில் தனுஷிற்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படும் நிலையில் அவரது திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் படங்கள் வெளியாகி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளன. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படம் ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாக உள்ளதாக முன்னதாக கூறப்பட்டது.
ஜூன் மாதத்தில் ராயன் ரிலீஸ்?: ஆனால் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்த படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளிப் போய் உள்ளது. படம் ஜூன் மாதம் ஏழாம் தேதி ரிலீசாகவுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரைவில் படக்குழுவினர் அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா முரளி, துஷாரா விஜயன், சரவணன் உள்ளிட்ட நடிகர்கள் முன்னணி கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம்: ப பாண்டி படத்தை தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த தனுஷ், ராயன் படத்தின்மூலம் மீண்டும் இயக்குனர் ஆகியுள்ளார். அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் அவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் நிறைவு பெறாத நிலையில் விரைவில் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்து, படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் தனுஷ் இயக்கம் மட்டுமில்லாமல் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இணைந்துள்ளார். முற்றிலும் இளைஞர்களை வைத்து இந்த படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார்.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் ராயன் படம்: இதனிடையே தனுஷின் ராயன் படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக்கியுள்ளது. இந்தப்படத்தின் நடிகர்களை அடுத்தடுத்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனுஷ் தொடர்ந்து அறிமுகம் செய்தார். அனைத்து போஸ்டர்களும் கருப்பு வெள்ளையில் வெளியிடப்பட்ட நிலையில் இவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன. இதனிடையே அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தின் ஷூட்டிங் இம்மாதத்திற்குள் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார்.


Click it and Unblock the Notifications











