லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டாதே.. தனுஷ் மகனுக்கு அபராதம்.. போக்குவரத்து காவல் துறை அதிரடி!
சென்னை: போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியதற்காக தனுஷின் மூத்த மகனுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் தனுஷ், காதல் கொண்டேன், திருடா திருடி, பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், வாத்தி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.
நடிகர் தனுஷ்: வளர்ந்து வரும் நடிகராக இருந்த தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்த நிலையில், 2004ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். அதன் பின் 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள், சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தாய், தந்தையுடன்: அதனைத் தொடர்ந்து, தனுஷ், ஐஸ்வர்யா மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோர் தாய், தந்தை என இருவர் வீட்டிலும் வசித்து வருகின்றனர். தீபாவளிக்கு தனது தாத்தா ரஜினிகாந்துடன் இருவரும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.
வண்டி ஓட்டலாமா: இதையடுத்து, தனுஷின் மூத்த மகன் யாத்ரா ஆர்15 பைக் ஓட்டும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ பதிவில் அவர் பைக் ஓட்ட அவருக்கு உதவியாளராக ஒருவர் சொல்லிக்கொடுக்கிறார். இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டுவது குற்றம் என்றும், உங்க வீட்லயே சிஸடம் சரி இல்லை என்றும் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.
ரூ.1000 அபராதம்: நெட்டிசன்களின் தொடர் பதிவால் போக்குவரத்து போலீசார் அந்த வீடியோவில் பைக் ஓட்டும் இளைஞர் மாஸ்க் அணிந்து இருந்ததால், அது யார் என்று சரியாக தெரியவில்லை என்றனர். மேலும், விலை உயர்ந்த வாகனத்தை ஓட்டியது யாத்ரா தான் என்பது தெரியவந்தால் அவர் மீது அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்து இருந்தனர். வாகனம் ஓட்டியது யாத்ரா என்பது உறுதியானதால், போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்த செய்தி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











