Thiruchitrambalam: அதுக்குள்ள ஒரு வருஷம் ஆயிடுச்சா.. கொண்டாட்டத்தில் திருச்சிற்றம்பலம் டீம்!

சென்னை: நடிகர் தனுஷ், நித்யா மேனன் லீட் கேரக்டரில் நடித்து கடந்த ஆண்டில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் சூப்பர் ஹிட்டடித்தது.

யாரடி நீ மோகினி படத்தை கொடுத்த இயக்குநர் மித்ரன் கே ஜவஹர் மீண்டும் தனுஷுடன் இந்தப் படத்தின் மூலம் இணைந்திருந்தார்.

Actor Dhanushs Thiruchitrambalam movie team meets for first year celebration

படத்தில் தனுஷுடன் நித்யா மேனன் மட்டுமில்லாமல் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோரும் நாயகிகளாக நடித்திருந்தனர்.

திருச்சிற்றம்பலம் படத்தின் முதலாண்டு நிறைவை கொண்டாடிய படக்குழு: நடிகர் தனுஷ் -மித்ரன் கே ஜவஹர் கூட்டணியில் யாரடி நீ மோகினி வெற்றிப்படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டில் மீண்டும் வெளியானது திருச்சிற்றம்பலம் படம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி இந்தப் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. தனுஷ் பக்கத்து வீட்டு பையன் லுக்கில் நடிக்கும் படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்து வருகின்றன. அந்த வகையில் இந்தப் படமும் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது.

Actor Dhanushs Thiruchitrambalam movie team meets for first year celebration

நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷுடன் இந்தப் படத்தின்மூலம் இணைந்திருந்தார் இசையமைப்பாளர் அனிருத். படத்தின் பாடல்கள் மற்றும் பிஜிஎம்மும் சிறப்பாக அமைந்தது. படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. இந்தப் படத்தில் தனுஷ் -நித்யா மேனன் ஜோடி மேஜிக் செய்திருந்தது. மேலும் படத்தில் ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கரும் நாயகிகளாக நடித்திருந்தனர். பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோரும் தனுஷின் அப்பா, தாத்தா கேரக்டரில் நடித்திருந்தனர்.

தனுஷ் மற்றும் நித்யா மேனன் காம்பினேஷன் இந்தப் படத்தில் மிகவும் சிறப்பாக அமைந்த நிலையில், இந்த காம்போ மீண்டும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் படம் ரிலீசாகி தற்போது ஒரு ஆண்டை பூர்த்தி செய்ததையடுத்து, டீம் நேற்றைய தினம் சன் டிவி அலுவலகத்தில் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டனர். இதில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்களும் கலந்துக் கொண்டனர்.

Actor Dhanushs Thiruchitrambalam movie team meets for first year celebration

இந்நிலையில் இந்த சந்திப்பிற்கான புகைப்படங்களை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அடுத்ததாக தனுஷின் கேப்டன் மில்லர் படம் வரும் டிசம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. சுதந்திர போராட்ட காலத்திற்கு முந்தைய கதைக்களத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

Actor Dhanushs Thiruchitrambalam movie team meets for first year celebration

இந்நிலையில், அடுத்ததாக தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகிவரும் டி50 படத்தின் சூட்டிங்கில் தனுஷ் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, அபர்ணா முரளி, சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் சூட்டிங்கை வரும் அக்டோபர் மாதத்தில் நிறைவு செய்ய தனுஷ் திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது. கேங்ஸ்டர் படமாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது டி50.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X