Vadachennai movie: என்னது வடசென்னை படத்துல தனுஷ் இல்லையா.. டைரக்டரும் வேறயா.. ரசிகர்கள் ஏற்பார்களா?
சென்னை: நடிகர் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, கிஷோர், சமுத்திரக்கனி என முன்னணி நடிகர்கள் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியானது வடசென்னை படம். வடசென்னை மக்களின் வாழ்வியலை பேசியம் இந்த படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது. வடசென்னை படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.
தனுஷ் கேரியரில் இந்த படம் மிகச் சிறப்பாக பார்க்கப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும் அதிகமான கவனத்தை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் குறித்து நீண்ட நாட்களாகவே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வடசென்னை 2 படம் விரைவில் உருவாகும் என்று விடுதலை படத்தின் ப்ரோமோஷன்களின்போது இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருந்தார். அதனால் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர் உள்ளவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த வடசென்னை படம் கடந்த 2018ம் ஆண்டில் வெளியாகி ஏராளமான ரசிகர்களுக்கு மிரட்டலான அனுபவத்தை கொடுத்திருந்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த படம் தனுஷ் கேரியரில் தி பெஸ்ட்டாக அமைந்திருந்தது. இந்த படத்தின் நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்களது வேலையை மிகவும் கச்சிதமாகĺ செய்திருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த நிலையில் படத்தின் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.
வடசென்னை படம்: வடசென்னை மக்களின் வாழ்வியலை இந்த படம் மிகச் சிறப்பாக பேசியதாகவும் விமர்சிக்கப்பட்டன. இந்த படம் ரிலீசான நேரத்திலேயே படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் காணப்பட்டது. இந்நிலையில் விடுதலை படத்தின் ப்ரோமோஷன்களின் போது பேசிய இயக்குநர் வெற்றிமாறன், வடசென்னை 2 படம் கண்டிப்பாக உருவாகும் என்று தெரிவித்திருந்தார். தற்போது விடுதலை 2 படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து அவர் வடசென்னை 2 படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
வடசென்னை 2 பட அப்டேட்?: இந்நிலையில் தற்போது வடசென்னை 2 படத்தை வெற்றிமாறன் இயக்கப் போவதில்லை என்றும் அவரது உதவி இயக்குனர் கார்த்திகேயன் என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தை வெற்றி மாறன் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதே போல தனுஷ் மற்றும் அமீர் இந்த படத்தில் நடிக்கப் போவதில்லை என்றும் அவர்களுக்கு பதிலாக வேறு நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
ரசிகர்கள் ஏற்பார்களா?: தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணி வடசென்னை படத்தில் மிகவும் சிறப்பாக பார்க்கப்பட்டது. இவர்கள் இருவரும் இணைந்தால் அது மேஜிக் படமாக அமையும் என்றும் விமர்சிக்கப்பட்டது. இதனால்தான் வடசென்னை படத்தின் இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பும் தொடர்ந்து ரசிகர்களிடையே காணப்படுகிறது. ஆனால் தனுஷ் இல்லாத வெற்றிமாறன் இல்லாத வடசென்னை 2 படம் எப்படிப்பட்ட தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











