Dharmendra Death: குடும்பமே ஆசையா இருந்துச்சே.. அதுக்குள்ள இப்படியா?.. கதறும் ஹேமமாலினி
சென்னை: இந்திய திரையுலகின் மூத்த நடிகராக தர்மேந்திரா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 89. தர்மேந்திராவிற்கு பிரகாஷ் கவுர், ஹேமமாலினி என்று இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி மூலம் சன்னி தியோல், பாபி தியோல் என இரண்டு மகன்களும், ஹேமமாலினி மூலம், விஜேதா, அஜிதா என இரண்டு மகள் உள்ளனர். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகரான தர்மேந்திரா, சோலே, சுப்கே சுப்கே உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். அதில் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களாகும். வயது மூப்பு காரணமாக திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகி இருந்த தர்மன்தான் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "Rocky Aur Rani Kii Prem Kahaani" படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, கடைசியாக"Ikkis" என்று படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் பாண்டிகைக்கு வெளியாக வெளியாக உள்ளது.

தர்மேந்திரா உயிரிழந்தார்: தர்மேந்திரா கடந்த வாரம் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று நிலையில், அவர் காலமானதாக செய்தி பரவியது. இது வெறும் வதந்தி என்றும், தர்மேந்திரா நலமுடன் இருக்கிறார். அவரை மருத்துவமனையில் இருந்து ரீசார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து செல்வதாக ஹேமமாலினி மற்றும் சன்னி தியோல் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், தர்மேந்திரா உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை இயக்குனர் கரண் ஜோகர் உறுதிப்படுத்தி உள்ளார். கரண் ஜோகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "ஒரு பெரிய சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது" என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் தர்மேந்திராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
அதுக்குள்ள என்ன அவசரமே: தர்மேந்திராவின் 90வது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாட குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இன்னும் ஒரு வாரத்தில், அதாவது டிசம்பர் 3 ந் தேதி அவரின் பிறந்த நாள் வர உள்ளது. அந்த பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட குடும்பத்தினர் நினைத்து இருந்த நிலையில் இன்று தர்மேந்திராவின் உயிர் பிரிந்தது இந்திய திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தர்மேந்திராவின் மனைவியாக நடிகை ஹேமமாலினிக்கு 90 பிறந்த நாளை சிறப்பாக நடந்த வேண்டும் என நினைத்து இருந்த நேரத்தில் இன்று அவர் உயிரிழந்துள்ளது. அவரின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











