வடசென்னைனாலே அப்படித்தானா?.. அந்த டைரக்டர்லாம் முட்டாள்ங்க.. தீனா கொடுத்த பளார் பதில்

சென்னை: Vadachennai (வடசென்னை) வடசென்னை பற்றி புரிதலே இல்லாமல் படம் எடுக்கப்படுவதாக பரவலான குற்றச்சாட்டு ஒன்று எழுந்திருக்கிறது.

கோலிவுட்டில் ஒரு காலத்தில் மதுரை என்றாலே கத்தி, அரிவாள், ரத்தம் என்ற நிலை இருந்தது. அந்த அடையாளத்தை மாற்றுவதற்கு பலரும் பல்வேறு வழிகளில் முயற்சி செய்தார்கள். அதேபோல்தான் கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் வட சென்னை என்றாலே க்ரைம் நடக்கும் இடம், கெட்ட வார்த்தை அதிகம் புழங்கும் இடம் என்ற லேபில் குத்தப்பட்டிருக்கிறது தமிழ் சினிமாவில்.

Actor Dheena Slams Label Movie Director Arunraja Kamaraj

மாற்றிய இரஞ்சித்: அப்படி லேபில் குத்தப்பட்ட வடசென்னை பற்றி மாற்று பார்வையை முதன்முதலில் முன்வைத்தவர் இயக்குநர் பா.இரஞ்சித். அவர் வந்த பிறகுதான் வடசென்னையின் வாழ்வியலும் அங்கு வாழும் மக்களின் கொண்டாட்டமும் வெகுஜன மக்களுக்கு புரிய ஆரம்பித்தது. அவர் போட்ட பாதையில் வெற்றிமாறனும் பயணித்து வடசென்னை என்ற படத்தை இயக்கினார்.

விமர்சனம்; ஆனால் வெற்றிமாறனும் பொதுபுத்தியில் வடசென்னையை காட்சிப்படுத்திவிட்டார் என்று அந்தப் படத்தின் மீதும் கடுமையான விமர்சனத்தை பலர் முன்வைத்தனர். அதேபோல் சமீப காலமாகவே வடசென்னையை மையப்படுத்தி படங்களும் வெப் சீரிஸ்களும் வருகின்றனர். வாரா வாரம் வெள்ளிக்கிழமைக்கூட டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில்கூட லேபில் என்ற வெப் சீரிஸ் ஒளிபரப்பாகிறது.

அருண்ராஜா காமராஜ் இயக்க ஜெய் நடித்திருக்கிறார். வடசென்னைவாசிகள்வாசி மீது குத்தப்பட்டிருக்கும் லேபிலை மாற்ற முயற்சிக்கும் ஒரு வழக்கறிஞர் என்ற ஒன்லைனை வைத்து கதை அமைத்திருக்கிறார்கள். இந்த வெப் சீரிஸ் கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கிறது. இந்நிலையில் வடசென்னையை மையமாக வைத்து கதைகளை உருவாக்கும் இயக்குநர்களை காட்டமாக விமர்சித்திருக்கிறார் நடிகர் தீனா.

வடசென்னை தீனா: வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் தீனா இதுகுறித்து ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், ""வடசென்னையில் கத்தி எடுப்பதுதான் எல்லோருக்கும் தெரியும் என்றால்; மதுரையிலோ திருச்சியிலோ யாருமே கத்தி எடுப்பதில்லையா. அங்கெல்லாம் ரவுடிசமே நடப்பதில்லையா என்று கேள்வி எழுப்பினார்.

முட்டாள்கள்: அதனையடுத்து சமீபத்தில் வந்த லேபில் வெப் சீரிஸில்கூட கெட்ட வார்த்தைகளாக பேசுகிறார்கள். வடசென்னை பாஷை என்றாலே இப்படித்தான் இருக்கும் என்று அடையாளப்படுத்த முயல்கிறார்களா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தீனா, ''அப்படி படம் எடுப்பவனுங்க எல்லாம் புரியாதவனுங்க. அறிவு இல்லாதவனுங்க. வடசென்னை அப்படிப்பட்ட ஊர் இல்லையென்று எத்தனைமுறைதான் சொல்லிக்கொண்டே இருப்பது.

உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் நீதிமன்றத்துக்கோ வக்கீல் வைத்தோ பார்த்துக்கொள்ளலாம். ஆனால் எங்களுக்கு அப்படி பெரும்பாலும் முடியவில்லை. ஏனெனில் காவல் நிலையத்துக்கு சென்றால் அங்கு எங்களுக்கு மரியாதை கிடைக்குமா?.. அதனால் எங்கள் பிரச்னையை நாங்கள் சண்டை செய்து பார்த்துக்கொள்கிறோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X