Just In
- 19 min ago
ஏப்ரலில் ஷூட்டிங்.. 'க/பெ ரணசிங்கம்' இயக்குனருடன் இணையும் சசிகுமார்.. உண்மைச் சம்பவக் கதையாம்!
- 1 hr ago
வீட்டின் அருகில் இருந்த வழிபாட்டு தலத்தை இடித்தாரா? நடிகர் விமல் மீது போலீசில் பரபரப்பு புகார்
- 1 hr ago
ஒரு நாளுக்கு இவ்வளவு செலவு வைப்பதா? நடிகைகள் நயன்தாரா, ஆண்ட்ரியா மீது தயாரிப்பாளர் புகார்!
- 14 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
Don't Miss!
- News
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்ற விமானத்தில் இறக்கிவிடப்பட்ட 4மாத குழந்தை மற்றும் தாய்
- Sports
கண்ணுல திமிரு.. விரல் எலும்பில் வேகமாக பட்ட பவுன்சர்.. வலியோடு எழுந்து நின்ற "சே" புஜாரா.. தரம்!
- Automobiles
இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...
- Lifestyle
இந்த 5 காய்கறிகள் உங்க உடல் எடையை குறைப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்குமாம்...!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஈசிஆர் ஃபிரியா இருக்குனு அடிக்கடி ரெய்டு போகாதீங்க.. ஆபத்து: மாஸ்டர் விழாவில் போட்டுத்தாக்கிய தீனா!
சென்னை: ஈசிஆர் ஃபிரியா இருக்குன்னு அடிக்கடி ரெய்டு போகாதீங்க ஆபத்து என நடிகர் தீனா டபுள் மீனிங்கில் பேசியது அரங்கை அதிரச் செய்தது.
நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் முதல் முறையாக உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் விஜய்க்கு முன்னணி நடிகரான விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜயும் விஜய் சேதுபதியும் மோதிக்கொள்ளும் காட்சிகள் படத்தின் போஸ்டர் ரிலீஸில் காண்பிக்கப்பட்டது.
விஜய்யின் வேற டைமன்சனை காட்டுற மாதிரி மாஸ்டர் இருக்கும்... லோகேஷ் கனகராஜ்

அடுத்த மாதம் ரிலீஸ்
படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் மற்றும் கைதி படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

சன் டிவியில்..
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த மற்றும் பணியாற்றிய அனைத்து பிரபலங்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி சன் டிவியில் நேரலையாக 2 மணி நேர தாமத்திற்கு பிறகு ஒளிபரப்பப்பட்டது.

ஹீரோயினுக்கு கலாய்
இந்த நிகழ்ச்சியில் பேசிய நகைச்சுவை நடிகர் தீனா, கிண்டலும் கேலியுமாக தமிழும் ஆங்கிலமும் கலந்து அள்ளிவிட்டார். குறிப்பாக படத்தின் ஹீரோயினான மாளவிகா மோகனன், தன்னுடன் பேச அலைந்ததாக கூறிய அவர், தான் பிஸியாக இருந்ததால் பேச முடியவில்லை என்றார். மேலும் கவலைப் படாதம்மா நான் வந்து உன்கிட்ட பேசுகிறேன் என மரண கலாய் கலாய்த்தார்.

பொறுப்பு துறப்பு
மேலும் படத்தை பற்றிதான் எல்லேரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் ஆடியோ லாஞ்சுக்கே எதிர்பார்ப்பு இருக்கும் என்றால் அது விஜய் படத்திற்குதான் என்றார். மேலும் தான் பேசுவது அனைத்தும் கற்பனையே, யார் மனதையும் புண்படுத்துவது நோக்கம் அல்ல என்று பொறுப்பை துறப்பு வாசகத்தை கூறினார்.

அடிக்கடி ரெய்டு
தொடர்ந்து பேசிய அவர், எல்லோருக்கும் பைக் ஓட்ட ஆசைதான். எல்லோர்க்கிட்டேயும் பைக் இருக்கு. ஆனா ஈசிஆர் ரோடு ஃபிரியா இருக்குன்னு அடிக்கடி ரெய்டு போகாதீங்க.. ஆபத்து என டபுள் மீனிங்கில் பேசினார். அவரது இந்த பேச்சைக் கேட்டு அரங்கமே ஆரவாரத்தில் அதிர்ந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களும் கைத்தட்டி சிரித்தனர்.

ஐடி ரெய்டு
ரசிகர்கள் ஓவென கத்தி ஆரவாரம் செய்தனர். நடிகர் விஜய் வீட்டில் கடந்த 30 நாட்களுக்குள்ளேயே 2 முறை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். ஈசிஆர் சாலையில் உள்ள விஜயின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. விஜய் வீட்டில் அடிக்கடி ஐடி ரெய்டு நடத்தப்படும் நிலையில் தீனா இப்படி பேசியது பரபரப்பை ஏற்படுதியது.

ராங் கால்..
தீனா, விஜய் டிவியின் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் ஜட்ஜஸ் முதல் சிறப்பு விருந்தினர் வரை அனைவரையும் ராங் கால் போட்டு மரண கலாய் கலாய்ப்பார். அதன் மூலம் பிரபலமான அவருக்கு கைதி படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார் லோகேஷ் கனகராஜ், இந்நிலையில் மாஸ்டர் படத்திலும் அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.