ப்பா.. இது உடம்பா.. முரட்டுத்தனமாக சிக்ஸ் பேக்.. மிரட்டல் லுக்கில் விக்ரம்.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: நடிகர் விக்ரம் பிளாக் அன்ட் வொய்ட்டில் மிரட்டல் சிக்ஸ் பேக்கில் இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
கோப்ரா படத்தில் பல்வேறு கெட்டப்புகளில் அவர் நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்தப் படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.

ரகசிய ஏஜென்ட்
கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் ஜான் என்ற பெயரில் ரகசிய ஏஜென்ட்டாக நடிக்கிறார். ஸ்பை த்ரில்லராக இந்தப்படம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், வினாயகன், ராதிகா சரத்குமார், திவ்ய தர்ஷினி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ரசிகர்கள் வாழ்த்து
இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார் விக்ரம். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விக்ரம் தாத்தாவாகி விட்டார், அவரது மகளுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என தகவல் பரவியது. இதனை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

ரிஸ்க் எடுக்கக்கூடியவர்
படத்தில் தனது கேரக்டருக்காக எப்படிப்பட்ட ரிஸ்க்கையும் எடுக்கக்கூடியவர் விக்ரம் என்பது அனைவரும் அறிந்ததே. உடலை வறுத்திக்கொண்டு நடிப்பதில் விக்ரமுக்கு நிகர் விக்ரம்தான். அந்தளவுக்கு ஹார்டுவொர்க் செய்பவர் விக்ரம்.

சிக்ஸ் பேக்கில் விக்ரம்
இந்நிலையில் நடிகர் விக்ரமின் முரட்டுத்தனமான போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பிளாக் அன்ட் வொய்ட்டில் வெறித்தனமான சிக்ஸ் பேக்கில் இருக்கும் அந்த போட்டோவை அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அள்ளும் லைக்ஸ்
'இன்று' என கேப்ஷன் கொடுத்துள்ளார். துருவ் விக்ரம் பலமுறை தான் தனது அப்பாவுடைய பெரிய ஃபேன் என கூறி வருகிறார். இந்நிலையில் இப்படி ஒரு போட்டோவை ஷேர் செய்து மிரள விட்டுள்ளார். இந்த போட்டோ இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











