Mari selvaraj :கபடி ப்ளேயர் பயோபிக்கில் த்ருவ்.. மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் மகன்!

சென்னை : இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன்.

ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

இதனிடையே படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி வரும் ஜூன் 1ம் தேதி செனைனயில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor Dhruv vikram joins with Mari selvaraj direction and the shooting starts on August

மாரி செல்வராஜ் இயக்கத்தில் த்ருவ் விக்ரம் : இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்தடுத்த கவனத்தை ஈர்க்கும் படங்களை கொடுத்து வருகிறார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்துள்ள மாமன்னன் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த பால்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. படத்தில் வடிவேலுவும் ஒரு பாடலை பாடியுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

படத்தின் இசை வெளியீடு வரும் ஜூன் 1ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் உதயநிதி, வடிவேலு உள்ளிட்டவர்கள் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ளது படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவற்றில் வெளிப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்ததாக தனுஷுடன் மாரி செல்வராஜ் இணையும் படத்தின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டில்தான் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே நடிகர் த்ருவ் விக்ரமை வைத்து தன்னுடைய அடுத்தப்படத்தை திட்டமிட்டுள்ளார் மாரி செல்வராஜ். இந்திய கபடி விளையாட்டு வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை த்ருவ் விக்ரமை வைத்து மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்துள்ள பேட்டியில், தனக்கு எப்போதுமே பயோபிக்கை எடுப்பது மிகவும் பிடித்தமான விஷயம் என்று தெரிவித்துள்ளார். தற்போது விளையாட்டு வீரரின் பயோபிக்கை படமாக இயக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Actor Dhruv vikram joins with Mari selvaraj direction and the shooting starts on August

இந்தப் படத்திற்காக த்ருவ் விக்ரம் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் படம் ஆகஸ்ட்டில் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தின் கதை குறித்து சியான் விக்ரம் மற்றும் இயக்கு பா ரஞ்சித் இருவரும் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின்மூலம் கவனத்தை ஈர்த்த மாரி செல்வராஜ், இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது உதயநிதியின் இறுதிப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகவும் பெரிய அளவில் உள்ளது. இந்தப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள நிலையில், அடுத்ததாக த்ருவ் விக்ரமையும் இயக்கவுள்ளார். முன்னதாக வர்மா, மகான் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த த்ருவ் விக்ரம், அடுத்ததாக விளையாட்டு சம்பந்தமான படத்தில் அதிலும் தமிழில் கவனத்தை ஈர்த்துள்ள மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X