Bison: நெல்லையில் 60 நாட்கள் நடக்கும் பைசன் பட சூட்டிங்.. படம் பயோ-பிக் இல்லையா!

சென்னை: நடிகர் துருவ் விக்ரமின் மூன்றாவது படமாக உருவாக உள்ளது பைசன் காளமாடன். நெல்லையில் தொடர்ந்து 60 நாட்கள் படத்தின் சூட்டிங் நடக்க உள்ளதாக படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் அப்டேட் தெரிவித்துள்ளார். இதையடுத்து சென்னையில் இரண்டாவது கட்ட சூட்டிங் நடக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படம் கபடியை மையமாக வைத்து உருவாக உள்ளதாகவும் ஆனால் பயோபிக் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

படத்தில் கபடியை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது. முன்னதாக இந்த படத்திற்காக தொடர்ந்து கபடி பயிற்சி மேற்கொண்ட துருவ் விக்ரம், கபடி வீரராக இந்த படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளியான படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்த சூழலில் பைசன் காளமாடன் படம் அந்த வெற்றிப்பட வரிசையில் இணையும் என்று எதிர்பார்க்கலாம்.

Actor Dhruv Vikram amp amp Mari Selvaraj combination Bison movie shooting in Nellai

பைசன் காளமாடன் படம்: துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன் ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம்பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடிக்க உள்ள படம் பைசன் காளமாடன். கடந்த ஆண்டில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கி இருந்தார் மாரி செல்வராஜ். இந்த படத்தை தொடர்ந்து வாழை படத்தை அவர் இயக்கி வந்த சூழலில் தற்போது துருவ் விக்ரமுடன் அவர் இணைந்துள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்திற்கு பைசன் காளமாடன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

பயோ பிக் இல்லை: இந்தப் படம் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவது உண்மைதான் என்று தனது பேட்டி ஒன்றில் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். ஆனால் படம் பயோ பிக் இல்லை என்றும் கற்பனை கதை தான் என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் 60 நாட்கள் தொடர்ந்து திருநெல்வேலியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த கட்ட ஷெட்யூல் சென்னையில் நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் எழில் அரசுவுடன் மாரி செல்வராஜ் இந்தப் படத்தி முதல் முறையாக இணைந்துள்ளார். மேலும் எடிட்டர் சக்தி குமாரும் இந்த படத்தின் மூலம் மாரி செல்வராஜ் கூட்டணியில் இணைந்துள்ளார்.

நிவாஸ் கே பிரசன்னா இசை: இந்த படத்தில் பிரஷ்ஷான ஒரு இசை தேவைப்பட்டதால் நிவாஸ் கே பிரசன்னாவை தாங்கள் இசையமைப்பாளராக தேர்ந்தெடுத்ததாகவும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். இந்த படத்தின் டேக் லைன் காளமாடன் படத்திற்கு சம்பந்தப்பட்டதாகவே அமைக்கப்பட்டுள்ளதாகவும் படம் வெளியாகும் போது இது அனைவருக்கும் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கபடியை மையமாக வைத்து இந்த படம் உருவாக உள்ள சூழலில் கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்காக துருவ் விக்ரம் தொடர்ந்து கபடி பயிற்சி மேற்கொண்டதையும் பார்க்க முடிந்தது. ஒரிஜினல் கபடி வீரருடன் அவர் இந்த பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.

மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்: அடுத்தடுத்து ஆதித்ய வர்மா மற்றும் மகான் படங்களில் நடித்து முடித்துள்ளார் துருவ் விக்ரம். அவரது மூன்றாவது படமாக பைசன் காளமாடன் படம் உருவாக உள்ளது. படத்தை அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் பா ரஞ்சித்தின் நீலம் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் மிகப்பெரிய காளை சிலைக்கு முன்பு துருவ் விக்ரம் இருப்பது போன்று காணப்பட்டது. இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில் அதில் பா ரஞ்சித், நடிகர் விக்ரம் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X