Dhruv Vikram: பாடகராகவும் மாறிய துருவ் விக்ரம்.. பிரபல ஹீரோவிற்காக பாடிய சூப்பர்ஹிட் பாடல்!

சென்னை: நடிகர் த்ருவ் விக்ரம் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். பாலா இயக்கத்தில் ஆதித்ய வர்மா என்ற படம்மூலம் இவர் தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார்.

முதல் படத்திலேயே நடிப்பில் ஸ்கோர் செய்திருந்தார் த்ருவ் விக்ரம். ஆயினும் இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

Actor Dhruv Vikram sung special song for Actor Nani

இதையடுத்து தன்னுடைய தந்தையுடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் படத்திலும் சிறப்பான கேரக்டரில் நடித்திருந்தார் த்ருவ் விக்ரம்.

நடிகர் த்ருவ் விக்ரம்: நடிகர் த்ருவ் விக்ரம் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான ஆதித்ய வர்மா என்ற படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். இந்தப் படம் தெலுங்கில் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி என்ற படத்தின் ரீமேக்காள வெளியானது. முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார் த்ருவ் விக்ரம். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் வெளியான மகான் படத்தில் தன்னுடைய தந்தையுடன் இணைந்து நடித்திருந்தார் த்ருவ்.

அப்பாவுடன் நடித்த மகான்: இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஓடிடியில் வெளியான இந்தப் படத்தில் தன்னுடைய தந்தையுடன் போட்டிப் போட்டு சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார் த்ருவ் விக்ரம். தொடர்ந்து அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி போட்டியை மையமாக கொண்ட கதைக்களத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதற்காக அவர் பயிற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் த்ருவ்: கபடி வீரரான மனத்தி கணேஷனின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ள நிலையில், அவரே த்ருவ் விக்ரமிற்கு கபடி பயிற்சி அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் தூத்துக்குடியில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் கதைக்களம் 1990ம் காலகட்டத்தையொட்டி படமாக்கப்பட உள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

பாடகராகவும் த்ருவ் விக்ரம்: நடிகராக மட்டுமில்லாமல் பாடகராகவும் பன்முகத் திறமை காட்டி வருகிறார் த்ருவ் விக்ரம். முன்னதாக சில பாடல்களை பாடியுள்ள அவர், தற்போது பிரபல தெலுங்குப்பட ஹீரோ நானி படத்திற்காக பாடல் பாடியுள்ளார். ஒடியம்மா என்ற இந்தப் பாடல் பார்ட்டி பாடலாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் நானியுடன் ஸ்ருதிஹாசன் இணைந்து நடனமாடியுள்ளார். இந்தப் பாடலின் சூட்டிங் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நானிக்காக பாடிய த்ருவ் விக்ரம்: இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்தப் பாடலில் நானி மற்றும் ஸ்ருதிஹாசனின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. இந்நிலையில் இந்தப் பாடலை த்ருவ் விக்ரம் ஸ்ருதியுடன் இணைந்து பாடியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் பாடலை மிகவும் ஸ்டைலிஷ்ஷாக பாடியுள்ளார் த்ருவ் விக்ரம். இந்நிலையில் நானியுடன் த்ருவ் இணைந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X