அண்ணனை மறக்காத தம்பி.. சிரஞ்சீவி சர்ஜா சமாதியில் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா!
சென்னை: கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா. கன்னடத்தில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் 2020ம் ஆண்டு நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். அவரின் சமாதியை அவரின் குடும்பத்தினர் கோவிலாக நினைத்து வரும் நிலையில், அவரின் நினைவிடத்தில் துருவா சர்ஜா தனது குழந்தைக்கு பெயர் சூட்டினார்.
சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்லவந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார். சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னாராஜூம் 10 ஆண்டுகளாக காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் . சீரஞ்சீவி ராஜா இறந்த போது மேக்னா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.தனது கணவரின் நினைவாக அடிக்கடி இணையத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மேக்னா.

சிரஞ்சீவி சர்ஜா சமாதியில் ஹனுமான் சிலை: இந்நிலையில், சிரஞ்சீவி சர்ஜா சமாதி அருகே ஹனுமா சிலையை நிறுவி இரு குழந்தைகளுக்கும் பெயர் சூட்டி உள்ளார் துருவா சர்ஜா. அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா அன்று தனது வீட்டில் ஹனுமானின் பெரிய வெண்கல சிலையை நிறுவி உள்ளார். மேலும், அந்த நாளில் அனுமனை வணங்கி, தனது குழந்தைகளுக்கு இறைவனின் பெயரை சூட்டி உள்ளார். தனது மூத்த மகளுக்கு ருத்ராக்ஷி என்றும், தனது மகனுக்கு ஹயக்ரீவா என்றும் பெயர்வைத்துள்ளார். இந்த விழாவின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார்: இதில் துருவா சர்ஜா, வெள்ளை நிற பஞ்சை, சட்டை மற்றும் சூட் அணிந்து கொண்டு ஆஞ்சநேயர் சிலையை நிறுவி, மலர்களை தூவி வழிபட்டார். துருவா சார்ஜாவின் மகனும் தந்தையைப் போலவே உடை அணிந்திருந்தார். மகள் ருத்ராக்ஷியும் தனது தாயாருக்கு பொருத்தமான இளஞ்சிவப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் உடை அணிந்து இருந்தார். இந்நிகழ்ச்சியில் மேகனா ராஜ், அவரின் மகன் ரேயான் சர்ஜா, நடிகர் அர்ஜூன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு குழந்தைகளை ஆசிர்வதித்தனர்.


Click it and Unblock the Notifications











