நீ திரும்பவும் வேணும் அண்ணா.. நீ இல்லாம இருக்கமுடியல.. நடிகர் சிருவின் தம்பி துருவா சர்ஜா கதறல்!
சென்னை: மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் தம்பி துருவா சர்ஜா தனது அண்ணனை நினைத்து கதறியிருப்பது நெஞ்சை பிழிகிறது.
Recommended Video
கன்னட சினிமாவின் பிரபல நடிகரான சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஞாயிற்றுக் கிழமை திடிரென ஏற்பட்ட கடுமையான கார்டியாக் அரெஸ்ட்டால் மரணமடைந்தார்.
அவரது மரணம் ஒட்டு மொத்த சினிமாத்துறையையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிரஞ்சீவி சர்ஜா மரணமடைந்து ஒரு வாரம் ஆகவுள்ள நிலையிலும் அவரது மரணத்தை ஜீரணிக்க முடியாமல் குடும்பத்தினரும் ரசிகர்களும் திணறி வருகின்றனர்.

துருவா உருக்கம்
இந்நிலையில் சிரஞ்சீவி சர்ஜாவின் தம்பியான நடிகர் துருவா சர்ஜா தனது அண்ணனின் மறைவு குறித்து தனது இன்ஸ்டா கிராம் ஸ்டோரி பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதாவது சிரஞ்சீவி சர்ஜா மரணிப்பதற்கு ஒரு நாள் முன்பாக, தனது சகோதரர்களுடன் சிறுவயதில் எடுத்த போட்டோவை போன்று தற்போது போட்டு எடுத்து ரீகிரியேட் செய்திருந்தார்.

மீண்டும் வேண்டும் வா..
மேலும் அந்த போட்டோவுக்கு, அப்போதும் இப்போதும்.. நாங்கள் ஒரே மாதிரியாக இருக்கிறோம்.. என்ன சொல்கிறீர்கள் தோழர்ளே.. என கேட்டு கேப்ஷன் கொடுத்திருந்தார். இந்நிலையில் அந்த போட்டோவை தனது ஸ்டோரி பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் நீ எனக்கு மீண்டும் வேண்டும். நீ இல்லாமல் இருக்க முடியவில்லை என பதிவிட்டுள்ளார்.

கண்ணீர்விட செய்துள்ளது
அவரது இந்த பதிவு காண்போரை கண்ணீர்விட செய்துள்ளது. சிறுவயது முதல் ஒன்றாகவே இருந்தவர்கள், வளர்ந்தவர்கள். இருவரின் திருமணத்தின் போதும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்தனர். அண்ணன் தம்பி என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு உயிருக்கு உயிராய் இருந்தார்கள்.

அண்ணனின் மரணம்
லாக்டவுன் நேரத்தில் கூட இருவரும் ஒன்றாக வீட்டில் செஸ் விளையாடியது, டிக்டாக் செய்தது என பாசத்துடன் இருந்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா திடீரென அகால மரணமடைந்தது கேட்கும் பலருக்கும் அதிர்ச்சியை தரும் நிலையில் துருவா சர்ஜாவுக்கு எப்படி இருக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

லேசான நெஞ்சுவலி
கடந்த 6 ஆம் தேதியே நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அப்போதே டாக்டரிடம் கன்சல்ட் செய்து முதலுதவி பெற்றிருக்கிறார். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி மீண்டும் கடுமையான மாரடைப்பு மட்டும் கார்டியாக அரெஸ்ட் ஏற்பட்டு உயிரை விட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications