Dinesh: குக்கூ படத்தில் நடிச்சிருக்கக்கூடாது.. இப்ப வருத்தப்படறேன்.. பட்ட பாட்டை சொன்ன கெத்து தினேஷ்

சென்னை: அட்டக்கத்தி படம் மூலம் ஹீரோவான நடிகர் தினேஷ், அந்தப் படத்தின் சிறப்பான கேரக்டராலேயே அறியப்பட்டு வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக இவர் திரையில் நடித்துவரும் நிலையில் துவக்கத்தில் ஆடுகளம், மௌனகுரு போன்ற படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ளார். கூத்துப்பட்டறையின் வார்ப்புகளில் இவரும் ஒருவர்.

ஒரு கட்டத்தில் பா ரஞ்சித்தின் அட்டக்கத்தி படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் அதை அப்படியே சிறப்பாக பற்றிக் கொண்டார். இந்தப் படத்தில் பா ரஞ்சித்தின் அரசியல்கள் ஒருபுறம் இருந்தாலும் தினேஷின் அலப்பறைகள் அதிகமாகவே இருந்தன. கல்லூரி இளைஞர் கதாபாத்திரத்தில் இளைஞர்களின் மனநிலையை அப்படியே வெளிப்படுத்தினார் தினேஷ்.

dinesh lubber pandhu movie cuckoo

அட்டக்கத்தி தினேஷ்: கூத்துப்பட்டறையில் இருந்து சினிமாவில் நடிக்கவந்து அதிகமான கவனத்தை பெற்றுவரும் நடிகர்களில் அட்டக்கத்தி தினேஷும் ஒருவர். இவருக்கு முதல் படமே சிறப்பாக அமைந்தது. பா ரஞ்சித் இயக்கத்தில் அட்டக்கத்தி படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். முன்னதாக ஆடுகளம், மௌனகுரு ஆகிய படங்களிலும் இவர் கேரக்டர் ரோல்களில் நடித்திருந்த நிலையில் அட்டக்கத்தி படத்தில் இளைஞர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் கேரக்டரில் நடித்திருந்தார். இவரது கல்லூரி காதல், நண்பர்களுடனான அரட்டை போன்றவை ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முதல் படத்திலேயே சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்திருந்தது.

குக்கூ படம்: தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான குக்கூ படத்தில் பார்வையற்றவராக நடித்திருந்தார் தினேஷ். தன்னையொத்த ஒரு பெண்ணுடனான காதலை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. இந்தப் படத்திற்காக பார்வையற்றவராகவே தன்னை மாற்றிக் கொண்டார் தினேஷ். காசியில் விக்ரம் செய்ததை போலவே, பார்வையற்றவராகவே தன்னுடைய கண்களை வைத்து இந்தப் படத்தில் தினேஷ் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக தொடர்ந்து 2 வருடங்கள் அவர் அப்படி நடிக்க வேண்டியிருந்ததாக தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

அட்டக்கத்தி தினேஷ் வருத்தம்: தற்போது குக்கூ படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுவதாகவும் தினேஷ் கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகள் கண்களை பார்வையற்றவராக வைத்து நடித்ததால் தான் அடுத்ததாக 5 ஆண்டுகள் கஷ்டப்பட்டதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கேமராவை பார்க்க முடியாமல் கஷ்டப்பட்டதாகவும் அப்படி பார்த்தால் கண்கள் கூசும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவ உதவியால் இதை சரி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கெத்து தினேஷாக மாற்றம்: இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றி மாறனின் விசாரணை படமும் தினேஷிற்கு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தில் இவருக்கு விருது கிடைக்காதது குறித்து அனைத்து தரப்பினரையும் பேச வைத்தார். தொடர்ந்து ரஜினியுடன் கபாலி படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்த தினேஷ், ஒருநாள் கூத்து, அண்ணனுக்கு ஜே, களவாணி மாப்பிள்ளை என அடுத்தடுத்து நடித்திருந்தார். சமீபத்தில்வெளியான இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்திலும் இவரது கேரக்டர் சிறப்பாக அமைந்திருந்தது. இதேபோல ஜே பேபி, லப்பர் பந்து படங்களும் தினேஷை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளது. லப்பர் பந்து படத்தின் கேரக்டரால் தற்போது அட்டக்கத்தி தினேஷிலிருந்து கெத்து தினேஷாகியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X