Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரச்சிதாவை விவாகரத்து செய்துவிட்டேனா?..முதல்முறையாக மனம் திறந்த தினேஷ்!
சென்னை : சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமியை விவாகரத்து செய்துவிட்டதாக பரவிவரும் தகவலுக்கு நடிகர் தினேஷ் விளக்கம் அளித்துள்ளார்,
தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் 2011ம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
மேலும் அந்த தொடரே அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அதன்பிறகு 2013ம் ஆண்டு சரவணன் மீனாட்சி 2வில் நடித்திருந்தார். அந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றார்.
சூர்யாவின்
வணங்கான்
படத்தில்
இணைந்த
பிரபல
டைரக்டர்...இவருக்கு
என்ன
ரோல்
தெரியுமா?

ரச்சிதா மகாலட்சுமி
பெங்களுரைத் சேர்ந்த நடிகை ரச்சிதா பார்ப்பதற்கு மாநிறமாக இருந்தாலும் இவரது அழகாலும் திறமையான நடிப்பாலும் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். கன்னடம், தெலுங்கு சீரியலில் நடித்து அனைவருக்கும் பரீச்சியம் ஆனார். நடிகை ரச்சிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இது சொல்ல மறந்த கதை
இவர்களது திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் ஜீ தொலைக்காட்சியில் நாச்சியார் என்ற சீரியலில் இருவரும் இணைந்து நடித்தார். ஆனால், அந்த சீரியல் கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது, கலர்ஸ் தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும், இது சொல்ல மறந்த கதை சீரியலில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும், விதவைப் பெண்ணாக நடித்து வருகிறார்.

தனிமையில் இருக்கிறேன்
இதையடுத்து, பேட்டி அளித்த ரச்சிதா, இது சொல்ல மறந்த கதை சீரியலில் வரும் கதாபாத்திரமும் தனது வாழ்க்கையும் ஒன்று என்றும், தான் தற்போது தனிமையில் இருப்பதாக கூறியிருந்தார். இதனால் ரச்சிதா கணவனை விட்டு பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்தன மேலும், அவர் விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் பரவின.

சட்டப்படி பிரியவில்லை
இந்நிலையில், பிரபல பத்திரிக்கை ஒன்று பேட்டி அளித்துள்ள தினேஷ், அனைவரின் குடும்ப வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும் அப்படித்தான் எனக்கும் ரச்சிதாவிற்கும் இடையே சில பிரச்சனை இருக்கு இது காலபோக்கில் சரியாகிவிடும். காலம் அனைத்தையும் மாற்றும் என்று நான் நம்புகிறேன். ரச்சிதா இரண்டாவது திருமணம் குறித்து பேசிய தினேஷ், வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்தால் சும்மா விடுவார்களா? அப்படித்தான் ரச்சிதாவை பற்றி பேசி வருகிறார்கள். நானும் ரச்சிதாவும் இதுவரை சட்டப்படி பிரியவேண்டும் என்று நினைக்கவில்லை என்று நடிகர் தினேஷ் கூறினார்.