ரச்சிதா மகாலட்சுமி கொடுத்த வலி.. வாழ்க்கையே மாறிடுச்சி.. பிக்பாஸ் மேடையில் கலங்கிய தினேஷ்!
சென்னை: பிக் பாஸ் சீசன்7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ள தினேஷ் பிக்பாஸ் மேடையில் கண்கலங்கி பேசினார்.
கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா என 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பிக் பாஸ் சீசனையும் உலக நாயகன் கமலஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 7: இதில் முதல் வாரத்தில் அனன்யா எலிமினேட் ஆகி வெளியேறினார். இதையடுத்து பவா செல்லதுரை, தன்னால் இந்த சூழ்நிலையில் இருக்க முடியாது என்று கூறி தானாகவே வெளியேறினார். அதை தொடர்ந்து மூன்றாவது வாரத்தில் விஜய் வர்மா குறைந்த வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டார். மேலும், நேற்று வினுஷா தேவி வெளியேறினார்.
நடிகர் தினேஷ்: இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நடிகர் தினேஷ் வந்துள்ளார். இதையடுத்து பிக் பாஸ் மேடையில் பேசிய தினேஷ், என் வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டு இருந்தது. ஆனால், வாழ்க்கையில் திடீரென ஒரு சறுக்கல் ஏற்பட்டு திடீரென எட்டு வருடம் பின்னால் போய்விட்டது போன்ற ஒரு உணர்வு எனக்கு இருக்கிறது.
வாழ்க்கையே மாறிடுச்சி: வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறும் என்று சொல்வார்கள். ஆனால், இந்த அளவுக்கு மோசமான ஒரு நிலையை வாழ்க்கை எனக்கு கொடுக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என மனைவி ரச்சிதா மகாலட்சுமியை பிரிந்தது குறித்து கமலின் முன்பாக மறைமுகமாக பேசினார் தினேஷ்.
காதல் திருமணம்: பெங்களுரைத் சேர்ந்த ரச்சிதா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர்கள் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கணவர் மீது புகார்: சில மாதத்திற்கு முன், நடிகை ரச்சிதா மாங்காடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தினேஷ் எனது செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பி மிரட்டுகிறார் என்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் தினேசை விசாரணைக்கு அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











