twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெற்றிகரமான 3 வது நாள், 5 வது நாள் என்று விளம்பரம்.. பாக்யராஜ் கிண்டல்!

    |

    சென்னை : கணேஷ் சந்திரசேகர் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் கணேஷ் சந்திரசேகர்.

    இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இதில் பிரபல இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பத்திரிகை விளம்பரங்கள் குறித்து பாக்யராஜ் பேசியது அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.

    நடிகர் சங்கத் தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேறிய.. பாக்யராஜ் அணி !நடிகர் சங்கத் தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேறிய.. பாக்யராஜ் அணி !

     செஞ்சி படம்

    செஞ்சி படம்

    செஞ்சி என்ற திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார் கணேஷ் சந்திரசேகர். இந்தப் படத்தின் முக்கியமான கேரக்டரிலும் அவர் நடித்துள்ளார். புதையலைத் தேடி செல்லும்போது ஏற்படும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப் படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

    ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீடு

    ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீடு

    இந்தப் படத்தின் சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இந்தப் படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சி பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் பிரபல டைரக்டர் மற்றும் நடிகர் பாக்யராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.

    விளம்பரங்கள் குறித்து கிண்டல்

    விளம்பரங்கள் குறித்து கிண்டல்

    தற்போதெல்லாம் பத்திரிகை விளம்பரங்களை பார்க்கும்போது மிகவும் நகைச்சுவையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். படத்தின் வெற்றிகரமான மூன்றாவது நாள், வெற்றிகரமான ஐந்தாவது நாள் என விளம்பரப்படுத்துவதாக சுட்டிக் காட்டிய பாக்யராஜ், ஒரு காலத்தில் வெற்றிகரமான 25வது நாள், 100வது நாள், 125வது நாள் மற்றும் 175வது நாள் என விளம்பரம் செய்வார்கள் என்று தெரிவித்தார்.

     ஜப்பான், கொரியாவில் தமிழ்ப்படங்கள்

    ஜப்பான், கொரியாவில் தமிழ்ப்படங்கள்

    தற்போது படம் வெளிவருவதே பெரிய சாதனையாக இருக்கும் நிலையில் இதுபோல விளம்பரம் வருவது தவிர்க்க முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ் சினிமா தற்போதைய காலகட்டங்களில் ஜப்பான், கொரியா போன்ற நாடுகளிலும் வெளியாகி பேசப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

    தமிழ் சினிமா வளர்ச்சி

    தமிழ் சினிமா வளர்ச்சி

    அங்கு தமிழ் சினிமா என்று பேசப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பாக்யராஜ் தெரிவித்தார். தமிழ் சினிமா ஒருபக்கம் இப்படி வளர்ந்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். செஞ்சி படத்தின் இயக்குநர் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றவில்லை, சுயம்புவாக வந்திருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

    செஞ்சி இயக்குநரின் விடாமுயற்சி

    செஞ்சி இயக்குநரின் விடாமுயற்சி

    செஞ்சி இயக்குநரின் விடாமுயற்சியை பாராட்டிய பாக்யராஜ், சினிமாவில் சின்ன ஆள், பெரிய ஆள் என்பதெல்லாம் இல்லை என்றும் படம் சிறப்பாக அமைந்தால் மக்கள் வரவேற்பார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் செஞ்சி படம் வெற்றிபெறவும் அவர் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டார்.

    English summary
    Actor & Director bhagyaraj on movies advertisements
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X