நாடோடிகள் 2... சாட்டை 2... இப்ப இந்தப் படத்தோட 2... சமுத்திரக்கனி ரெடி!
சென்னை: நடிகர் சமுத்திரக்கனி, அப்பா படத்தின் அடுத்த பாகத்தை ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறார்.
சமுத்திரக்கனி தயாரித்து இயக்கிய படம், அப்பா. தம்பி ராமையா, நமோ நாராயணன், வினோதினி, விக்னேஷ் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது. இளையராஜா இசை அமைத்திருந்தார்.

பள்ளியில் நடக்கும் அவலங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படம் கவனிப்பட்டது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகத்தை அவர் தயாரித்து இயக்கப் போவதாக கடந்த ஒரு வருடத்துக்கு முன் அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி இப்போது இந்தப் படத்தின் வேலைகளை தொடங்கி இருக்கிறார் சமுத்திரக்கனி. அடுத்த மாதம் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது. முதல் பாகத்தில் நடித்தவர்களே இதிலும் நடிக்கிறார்கள். புதிதாக 'பிச்சைக்காரன்' மூர்த்தி இணைந்துள்ளார்.
சமுத்திரக்கனி, தனது இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெற்றிப் பெற்ற நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் ஷூட்டிங் முடிந்து பைனான்ஸ் பிரச்னை காரணமாக வெளிவராமல் நிற்கிறது.
இதற்கிடையே அவர், சாட்டை படத்தின் இரண்டாம் பாகமான 'அடுத்த சாட்டை'யில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த சில நாட்களுக்கு முன் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில், அப்பா படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது இயக்கி நடிக்க இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











