விஜயகாந்த் மகனை வைத்து படம் இயக்க போகிறேன்.. மீண்டும் டைரக்டராகும் சசிகுமார்!
சென்னை : இயக்குநராகவும் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார் சசிகுமார்.
இவரது இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம், ஈசன் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பாக அமைந்தன.
தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவரும் சசிகுமார் விரைவில் படம் இயக்கவுள்ளதாகவும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சசிகுமார்
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகங்களை காட்டி வருகிறார் சசிகுமார். இவரது இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம், ஈசன் படங்கள் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தன. இதனிடையே தொடர்ந்து நடிப்பிலேயே அதிகமான கவனம் செலுத்தி வருகிறார் சசிகுமார்.

நான் மிருகமாய் மாற படம்
இவரது நடிப்பில் தற்போது நான் மிருகமாய் மாற என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். படத்தில் சசிகுமாருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் ஹரிபிரியா. இந்தப் படத்திற்கு முதலில் காமன் மேன் என்று பெயரிடப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த தலைப்பை மாற்ற வேண்டிய சூழலில் படக்குழு சிக்கியது.

மிருகமாய் மாறும் காரணம்
படம் அடுத்தமாதம் ரிலீசாக உள்ளதாக சசிகுமார் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மனைவி, தம்பி என அழகான குடும்பத்துடன் வாழும் ஒருவன், மிருகமாய் மாறி வில்லன்களை வீழ்த்த காரணமான சந்தர்ப்பங்களை இந்தப்படம் கதைக்களமாக கொண்டுள்ளது.

மீண்டும் இயக்குநர்
சுப்ரமணியபுரம், நாடோடிகள் என அடுத்தடுத்த ஆக்ஷன் படங்களில் நடித்த சசிகுமார் இந்த கேரக்டருக்கு சிறப்பான தேர்வாக இருப்பார் என்று கருதிய இயக்குநர் அவரை இந்த படத்திற்கு தேர்வு செய்துள்ளதாகவும் சசிகுமார் தெரிவித்துள்ளார். இதனிடையே அடுத்ததாக தான் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாகவும் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

சரித்திரப் படம் இயக்கும் சசிகுமார்
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை ஹீரோவாக வைத்து விரைவில் படம் இயக்கவுள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மதுரை எம்பி வெங்கடேசனுடன் இணைந்து சரித்திர படம் ஒன்றை இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாகவும் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த படங்கள் இயக்க திட்டம்
தொடர்ந்து தனக்கு பிடித்தமான சில படங்களை இயக்கவுள்ளதாகவும் அவர் உற்சாகமாக தெரிவித்துள்ளார். இதனிடையே தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சசிகுமார் படம் இயக்கவுள்ளார் என்பதே அவரது ரசிகர்களுக்கு மிகவும் சந்தோஷமான விஷயமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


Click it and Unblock the Notifications











