விஜய்யின் அரசியல் என்ட்ரி.. சசிகுமார் வைத்த கோரிக்கை.. நிறைவேற்றுவாரா தளபதி?
சென்னை: நடிகர் சசிகுமார் அடுத்தடுத்த அழுத்தமான கதைக்களங்களில் நடித்து வருகிறார். அயோத்தி, கருடன் என இவரது அடுத்தடுத்த படங்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலையும் வரவேற்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சசிகுமார் லீட் கேரக்டரில் நடித்துள்ள நந்தன் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது.
இந்தப் படத்திற்காக அதிகப்படியான பிரமோஷன்களில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சசிகுமார் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் படம் ரிலீசான நிலையிலும் இவரது பேட்டிகள் தொடர்ந்து வருகின்றன. ரசிகர்களிடையே பகிர்ந்துக் கொள்ள இவ்வளவு விஷயங்களை இவர் வைத்துள்ளாரா என்னும் அளவிற்கு அடுத்தடுத்த விஷங்களை இவர் பகிர்ந்து வருகிறார்.

நடிகர் சசிகுமார்: நடிகர் சசிகுமாரின் பயணம் சுப்ரமணியபுரத்தில் மிகப்பெரிய அளவில் துவங்கியது. இந்தப் படம் கொடுத்த வெற்றியை அவரே எதிர்பார்த்திருப்பாரா என்று யோசிக்கும்வகையில் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போதும் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் ஒன்றாகத்தான் சுப்ரமணியபுரம் படம் உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கியும் தயாரித்தும்வந்த சசிகுமாரின் அடுத்தடுத்த படங்கள் கைக்கொடுக்காத நிலையில், அவர் அடுத்த இயக்குநர்களின் கூட்டணியிலும் படங்களை கொடுத்திருந்தார். தனக்கு ஏற்பட்ட கடனுக்காக தான் விரும்பாத கதைக்களங்களிலும் நடித்ததாக அவர் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.
நந்தன் படம்: இந்நிலையில் அவருக்கு சிறப்பான படங்களாக அடுத்தடுத்து அயோத்தி, கருடன் படங்கள் அமைந்துள்ளன. இதுகுறித்து தன்னுடைய உற்சாகத்தையும் பதிவு செய்திருந்தார் சசிகுமார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சரவணன் இயக்கத்தில் சசிக்குமார் நடித்திருந்த நந்தன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுததுள்ளது. இந்தப் படத்திற்காக அதிகபட்சமான பிரமோஷன்களில் சசிகுமார் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. படம் ரிலீசான நிலையிலும் இவரது பேட்டிகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் பிரபல வாரயிதழுக்கு சசிகுமார் அளித்துள்ள பேட்டியில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியுள்ளார்.
விஜய்யின் அரசியல் பிரவேசம்: விஜய்யின் அரசியல் பிரவேசம் அவரது சொந்த முடிவு என்று கூறியுள்ள சசிகுமார், இருந்தாலும் அரசியல்லயும் இருங்க, நடிப்பையும் விட்டுடாதீங்க என்று விஜய்யிடம் சசிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். இன்னமும் அனைவருக்கும் பிடித்தமானவராகவும் பல கோடி ரூபாய் பிசினஸ் உள்ள ஹீரோவாகவும் விஜய் உள்ள நிலையில், இவை அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு போவதும் அவரது முடிவுதான் என்றும் சசிக்குமார் கூறியுள்ளார். முன்னதாக விஜய்யை வைத்து பிரம்மாண்டமான வரலாற்றுப்படத்தை இயக்கவிருந்ததாகவும் ஆனால் அதிகப்படியான பட்ஜெட் காரணமாக இந்தப் படம் உருவாகவில்லை என்றும் சசிக்குமார் கூறியிருந்தார்.
விஜய்க்கு சொன்ன கதை: இதையடுத்து தான் வேறு கதை சொல்லட்டுமா என்று விஜய்யிடம் தான் கேட்டதாகவும், ஆனால் தான் கூறிய வரலாற்றுக் கதையில் தனக்கு அதிகமான நம்பிக்கை உள்ளதாகவும், செய்தால் அந்தக் கதையை செய்யவேண்டும் இல்லையென்றால் வேண்டாம் என்றும் விஜய் கூறிவிட்டதாகவும் சசிக்குமார் கூறியுள்ளார். இந்தப் பேட்டிகளில் அடுத்தடுத்து லட்சுமி மேனன், வெற்றிமாறன், நிகிலா விமல் உள்ளிட்ட அனைவரையும் அவர்களின் படங்கள் குறித்தும் பேசியுள்ளார் சசிக்குமார்.


Click it and Unblock the Notifications











