பதிலடினா இப்படி இருக்கனும்.. நிர்வாணமாக நடித்ததற்கான காரணமே வேற.. மலையாள நடிகையின் பதிலால் ஷாக்!

கொச்சி: உலகம் முழுவதும் இருக்கக்கூடிய திரையுலகங்களில் இன்னும் வளரவேண்டிய திரையுலகங்களின் பட்டியலில் இந்திய திரையுலகமும் இருக்கின்றது. அதற்கு திரையுலகில் உள்ளவர்களை மட்டும் காரணமாக கூறிவிடமுடியாது. படங்களை வரவேற்கின்ற, படங்களை அங்கீகரிக்கின்ற இடத்தில் இருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பக்குவமே தேவைப்படுகின்றது. அந்த வகையில் இந்திய சினிமாக்களை ரசிக்கும் ரசிகர்கள் பக்குவப்படுவதில் பல நூற்றாண்டுகள் பின்னால் உள்ளார்கள். மிகவும் சொற்ப ரசிகர்கள் மட்டுமே தரமான படங்களை அதாவது எதார்த்த சினிமாவை அங்கீகரிக்கும் பக்குவத்தில் உள்ளனர். இப்படியான சம்பவம்தான் இப்போது நடைபெற்றுள்ளது.

இயக்குநர் பாயல் கபாடியா இயக்கத்தில் வெளியான படம் 𝗔𝗟𝗟 𝗪𝗘 𝗜𝗠𝗔𝗚𝗜𝗡𝗘 𝗔𝗦 𝗟𝗜𝗚𝗛𝗧. இந்தப் படத்தில் கனி குருஸ்தி, சாயா கதம், திவ்ய பிரபா மற்றும் ஹிருது ஹாரூன் ஆகியோர் நடித்தனர். இந்தப் படம் கேரளாவில் இருந்து மும்பைக்கு, நர்ஸ் வேலைக்காகச் செல்லும் இரண்டு பெண்களை மைய்யப்படுத்தியதாகும். இதில் ஒரு பெண் மிகவும் அமைதியானவர், அதேநேரத்தில் தனது வாழ்க்கையில் மிகவும் கட்டுப்பாடுடன் இருப்பவர். மற்றொரு பெண் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல், தனது வாழ்க்கையினை மிகவும் அனுபவித்து வாழவேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர். இவர்களின் வாழ்க்கையை மைய்யப்படுத்திய கதைதான் அது.

movie

படத்தில் நடிகை திவ்ய பிரபா பல ஆண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகளில் நடித்தார். சில காட்சிகளில் நிர்வாணமாகவும் நடித்தார். இந்தப் படம் பிரான்ஸில் நடைபெற்ற 77வது கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உயரிய விருதான 'கிராண்ட் பிரிக்ஸ்' விருதை வென்று அசத்தியது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். உண்மைச் சம்பவத்தை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் ஏற்கனவே கூறியதைப்போல், பக்குவமில்லாத இந்திய ரசிகர்கள் மத்தியில் திவ்யா பிரபா நிர்வாணமாக நடித்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

movie

ரியாக்‌ஷன்: இந்தக் காட்சிகளைப் பார்த்தவர்களில் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஏற்கனவே குறிப்பிட்ட பக்குவமில்லாத ரசிகர்கள் மிகவும் மோசமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இப்படியான நிலையில், இந்த விமர்சனங்களுக்கு திவ்ய பிரபாவின் ரியாக்‌ஷன் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. குறிப்பாக இவர் விமர்சகர்களுக்கு பதில் அளிப்பதை விடவும், பதிலடி கொடுத்துள்ளார்.

movie

பாதிக்காது: அதாவது, " நான் ஒரு படத்தில் நடிக்கின்றேன் என்றால், அந்தப் படத்தின் கதையைப் புரிந்துகொண்டு, எனது கதாபாத்திரத்தினை பிடித்துத்தான் நடித்து வருகின்றேன். அப்படித்தான், 𝗔𝗟𝗟 𝗪𝗘 𝗜𝗠𝗔𝗚𝗜𝗡𝗘 𝗔𝗦 𝗟𝗜𝗚𝗛𝗧 படத்திலும் எனது, கதாபாத்திரத்தினை புரிந்து நடித்தேன். எனது கதாபாத்திரம் தொடர்பாக சிலர் கமெண்ட் செய்வதை கவனித்துதான் வருகின்றேன். இவர்கள் மொத்த ரசிகர்கள் பட்டாளத்தில் வெறும் 10 சதவீதம்பேர்தான். இவர்களின் கமெண்ட் என்னை எந்தவகையிலும் பாதிக்காது.

movie

பதிலடி: அதேபோல் நான் பணத்திற்காகவோ, விளம்பரத்திற்காகவோ இந்தப் படத்தில் நடிக்கவில்லை. நான் ஏற்கனவே பல படங்களில் நடித்து புகழும் விருதுகளும் பாராட்டுகளும் பெற்றுள்ளேன். அப்படியான எனக்கு விளம்பரத்திற்காகவோ, பணத்திற்காகவோ இந்தப் படத்தில் நடிக்கவேண்டிய அவசியம் இல்லை. படத்தின் தேவைக்காக கதாபாத்திரத்தின் தன்மையை உணர்த்துவதற்காக நிர்வாணக்காட்சியில் நடித்தேன்" எனக் கூறியுள்ளார். இவரது பதில், பலரது கவனத்தினை ஈர்த்தது மட்டும் இல்லாமல் வேகமாகவும் பரவி வருகின்றது.

movie

More from Filmibeat

Read more about: movie
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X