கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் டாக்டர் ராஜசேகர் உடல்நிலை.. மருத்துவமனை அறிக்கை!

By

ஐதராபாத்: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராஜசேகரின் உடல் நிலை சீராக இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரபல நட்சத்திர தம்பதியான டாக்டர் ராஜசேகர், ஜீவிதா ஆகியோருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

அவர்கள் மகள்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

ராஜசேகர், ஜீவிதா

ராஜசேகர், ஜீவிதா

மகள்கள் ஷிவானி, ஷிவாத்மிகா குணமான நிலையில், டாக்டர் ராஜசேகரும் ஜீவிதாவும் சிகிச்சை பெற்று வந்தனர். தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை டாக்டர் ராஜசேகரும் உறுதிப்படுத்தி இருந்தார். 'மகள்கள் குணமடைந்துவிட்டார்கள். நானும் ஜீவிதாவும் இப்போது நன்றாக இருக்கிறோம். விரைவில் திரும்புவோம்' என்று கூறி இருந்தார்.

விரைவில் குணமாக

விரைவில் குணமாக

நடிகை ஜீவிதாவும் குணமானதை அடுத்து வீட்டுக்குத் திரும்பினார். இந்நிலையில் அவர்கள் மகள் ஷிவாத்மிகா, இரு தினங்களுக்கு முன், கொரோனாவுடன் அப்பா கடுமையாகப் போராடி வருவதாகவும் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்திக்க வேண்டும் என்றும் ட்விட்டரில் கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர் உடல் நிலை பற்றி வதந்தி பரவியது.

நன்றாக இருக்கிறார்

நன்றாக இருக்கிறார்

பின்னர் மற்றொரு ட்விட்டில், உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை. நன்றாக இருக்கிறார். உடல்நலம் பெற்று வருகிறார். உங்கள் பிரார்த்தனைகள் தேவை. பீதியடைய வேண்டாம். வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கூறி இருந்தார்.

சீராக இருக்கிறது

சீராக இருக்கிறது

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டாக்டர் ராஜசேகர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து மருத்துவக் குழு கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X