காதலர்களின் காதல் மன்னன்! துல்கர் சல்மானுக்கு பிறந்த நாள்! ஒரு குட்டி ரீவைண்ட்!

கொச்சி: நடிகர் மம்முட்டியின் மகனாக மலையாள சினிமாவில் அறிமுகமானாலும் இன்றைக்கு இந்திய சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களால் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் இன்று தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவர் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

துல்கர் சல்மான் தனது திரை வாழ்க்கையை மிகவும் தாமதமாகத்தான் தொடங்கினார். அதுவும் அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்காமல் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சரியாக 12 ஆண்டுகளுக்கு முன்னர்தான் சினிமா உலகிலேயே கால் பதித்தார் துல்கர். மலையாளத்தில் வெளியான ஷெகண்ட் ஷோ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இன்றைக்கு அதிரடியான சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்கள், தேடித் தேடி உருகி உருகி காதலிக்க, பாசத்தை பொழிய, திரையில் அவர் அழும்போது ரசிகர்களை கண் கலங்க வைக்கின்ற நடிப்பு என ஒரு கம்ப்ளீட் நடிகராக தன்னை நிலை நிறுத்தியுள்ளார்.

Dulquer Salmaan

கட்டுமஸ்தான் உடல், வசீகர சிரிப்பு என சினிமா பிம்பப்படுத்தியுள்ள கதாநாயகன் தோற்றத்துக்கு ஏற்ற நடிகராக உள்ளார். இதனாலே இவருக்கு பெண் ரசிகர்கள் அளவுக்கு ஆண் ரசிகர்கள் உள்ளனர். இன்றைக்கு இளம் பெண்களின் கனவுன் கண்ணனாக வலம் வருகின்றார். தனக்கு துல்கர் சல்மான் போல மாப்பிள்ளை வேண்டும் என வெளிப்படையாகவே கூறும் பெண்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

காதலர்களின் நாயகன்: இப்படியான ரசிகர்களை வசீகரித்துள்ள துல்கர் சல்மான் தமிழில் மிகக் குறைவான படங்களிலேயே நடித்துள்ளார். ஆனாலும் தமிழில் இவருக்கு உள்ள ரசிகர்கள் பட்டாளம், இவரைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் என பெரும் அன்பையே சம்பாதித்து வைத்துள்ளார். ஓ காதல் கண்மணி படத்தில் நடித்து காதலர்களை உருக வைக்கும் கதாநாயகனாக மாறிப்போனார். அதேபோல் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹே சினாமிகா உள்ளிட்ட படத்தின் மூலம் தனது ரசிகர்கள் பட்டாளத்தை விரிவு படுத்தினார்.

தமிழ் ரசிகர்கள்: தமிழ் ரசிகர்கள் இயல்பிலேயே மலையாள சினிமாக்களை பார்த்து சிலாகிக்கும் குணத்தைக் கொண்டு இருப்பதால் மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளியான பெங்களூரு டேஸ், களி, சார்லி, உஸ்தாத் ஹோட்டல், 100 டேஸ் ஆஃப் லவ் உள்ளிட்ட படங்களைக் கொண்டாடித் தீர்த்துள்ளனர். இதில் உஸ்தாத் ஹோட்டல் படம் துல்கர் சல்மானின் இரண்டாவது மலையாளப் படம். தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தின் தமிழ் டாப்பிங்கை ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவுமே கொண்டாடியது. அண்மையில் வெளியான கல்கி 2898 ஏ.டி படத்திலும் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திகில்: ஹிந்தியில் இவரது நடிப்பில் வெளியான சுப் படம் உண்மையிலேயே ரசிகர்களுக்கு திகிலூட்டக்கூடிய படம். இந்த படத்தில் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஒரு படத்திற்கு தவறான விமர்சனங்களைக் கொடுக்கும் விமர்சகர்களைத் தேடித்தேடிக் கொல்லும் அதி தீவிரமான சினிமா சைக்கோ கில்லராக நடித்திருப்பார். தனது காதலியே தவறான விமர்சனம் கொடுத்திருந்தாலும் அவரை கொலை செய்யும் க்ளைமேக்ஸ் காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் திகிலாகத்தான் இருக்கும்.

காதல் மன்னன்: இப்படி தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு தன்னால் முடிந்த உழைப்பினைச் செலுத்தி அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் கற்பிக்கும் நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவுக்கு கிடைத்த ரத்தினம். மலையாள சினிமாவில் மட்டும் தேங்கி விடாமல், மாற்று மொழிப்படங்களிலும் நடித்து தனது நடிப்புத் தாகத்திற்கு விருந்து வைத்து வரும் காதல் மன்னன் துல்கர் சல்மான் இன்னும் பல படங்களில் நடித்து சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என ஃபிலிமி பீட் தமிழ் சார்பாக இந்த பிறந்த நாளில் வாழ்த்துகளுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X