கனவு நாயகன் துல்கர் சல்மானுக்கு இன்று பிறந்தநாள்.. பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து !
கொச்சி : அட்டகாசமான நடிப்பாற்றலாலும், அனைவரும் ரசிக்கும் அழகாலும் இன்று வரை தான் நடிக்கும் திரைப்படங்களில் மூலம் பல கோடி மக்களை கவர்ந்து வருபவர் நடிகர் துல்கர் சல்மான்.
மலையாளத்தில் மிகப்பிரபலமான உச்ச நடிகராக இருந்து வரும் துல்கர் சல்மான் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் நடித்து பல கோடி ரசிகர்களை கொண்டுள்ளார்.
இவ்வாறு தனது நடிப்பு எல்லையை இந்தியா முழுவதும் கொண்டு சென்றுள்ள துல்கர் சல்மான் ஜூலை 28 ஆம் தேதியான இன்று இவர் தனது 34 ஆவது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களின் மூலம் வாழ்த்துக்களைச் சொல்லி வருகின்றனர்.

கனவு கண்ணனாக
எதார்த்தமான நடிப்பு எக்கச்சக்கமான அழகு என பார்க்கவே ரம்மியமாக காணப்படும் நடிகர் துல்கர் சல்மான் இந்திய நடிகர்களில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்களில் மிக முக்கிய நபராக இருந்து வருகிறார். மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் துல்கர் சல்மான் பல பெண்களின் கனவு கண்ணனாக இன்றும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சிறந்த நடிகர்
மலையாளத் திரையுலகின் மூத்த நடிகர் மெகாஸ்டார் மம்முட்டியின் மகனான இவர் செகண்ட் ஷோ என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு மிகப்பிரபலமானார். நடித்த ஓரிரு படங்களிலேயே தனது முத்திரையைப் பதித்து பின் துல்கர் சல்மான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களின் கதாபாத்திரங்களையும் ரசிகர்களின் மனதில் பதியும் வகையில் சிறந்த கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து இன்றுவரை மிகச் சிறந்த நடிகராக விளங்கி வருகிறார்.

ஹிந்தி திரைப்படத் துறையிலும்
இவர் நடித்த உஸ்தாத் ஹோட்டல் பெங்களூர் டேஸ், சார்லி, கம்மட்டிபாடம், ஓ காதல் கண்மணி உள்ளிட்ட பல படங்கள் மூலம் இவரை சிறந்த நடிகராகவும் வெளிப்படுத்தியுள்ளது. இவர் எந்த ஒரு கதாப்பாத்திரமாக இருந்தாலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் துல்கர் தமிழ்-மலையாளம் மட்டுமல்லாமல் தற்பொழுது ஹிந்தி திரைப்படத் துறையிலும் தன்னுடைய காலடியை பதித்து வருகிறார்.

அனைவராலும் கொண்டாடப்பட்டது
சமீபத்தில் இவர் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.இந்த ஆண்டு வசூலை வாரி குவித்து சிறந்த திரைப்படமாக அனைவராலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழில் வான் மற்றும் ஹே சனாமிகா என்ற இரண்டு படங்கள் தற்போது வெளியாக காத்துக் கொண்டிருக்கின்றது.

பிறந்தநாள்
இவ்வாறு படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிக்காட்டி வரும் துல்கர் சல்மான் ஜூலை 28 ஆம் தேதியான இன்று இவர் தனது 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி நண்பர்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களைக் கூறி வரும் நிலையில் பல திரைப்பிரபலங்கள் இவரது பிறந்தநாள் காமன் டிபியை வெளியீட்டு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











