Surya43: சூர்யா 43 படத்தில் இணையும் துல்கர் சல்மான்.. க்யூட் காம்பினேஷனா இருக்கே!

சென்னை: நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா கூட்டணியில் சூர்யா 43 படத்தில் நடிகர் சூர்யா இணையவுள்ளார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

முன்னதாக இந்தக் கூட்டணி சூரரைப் போற்று படத்தில் இணைந்திருந்தது. தேசிய விருதுகளையும் குவித்தது.

Actor Dulquer Salmaan going to join Surya43 movie to be directed by Sudha Kongara

சூர்யா43 படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்: நடிகர் சூர்யா -சுதா கொங்கரா -ஜிவி பிரகாஷ் கூட்டணியில் உருவாகி கடந்த 2020ம் ஆண்டில் ஓடிடியில் நேரடியாக ரிலீசாகியிருந்தது சூரரைப் போற்று படம். ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு, அவரது வாழ்க்கையில் நடந்த சில சுவையான விஷயங்களின் கோர்வையாக இந்தப் படத்தை இயக்கியிருந்தார் சுதா கொங்கரா. படத்தில் சூர்யாவின் நடிப்பு அந்தக் கேரக்டருக்கு சிறப்பாக உயிர் கொடுத்திருந்தது.

மேலும் படத்தில் அபர்ணா முரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் தங்களது பெஸ்ட் பர்பார்மென்சை கொடுத்திருந்தனர். தமிழ், தெலுங்கில் உருவாகியிருந்த இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. கன்னடம் மற்றும் மலையாளத்திலும் இந்தப் படம் ஒரே நேரத்தில் வெளியானது. இந்தியிலும் உதான் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரிலீசானது.

என்றபோதிலும் தற்போது இந்தப் படத்தின் ரீமேக் இந்தியின் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தையும் சுதா கொங்கராவே இயக்கியுள்ளார். சூர்யா தயாரித்துள்ளார். அவர் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. வரலாற்று பின்னணியில் இந்தப் படத்தை இயக்குநர் சிவா டைரக்ட் செய்து வருகிறார். கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காடுகள் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது.

சூர்யாவின் பிறந்தநாளையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்தப்படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்ததாக சூர்யா 43 படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். சூரரைப் போற்று படத்திற்கு பிறகு மீண்டும் இந்தப் படத்தில் சுதா கொங்கரா இயக்கவுள்ளார். மேலும் அந்தப் படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ்தான் சூர்யா43 படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.

Actor Dulquer Salmaan going to join Surya43 movie to be directed by Sudha Kongara

சூர்யா 43 படம்தான் ஜிவி பிரகாஷின் 100வது படம். இதுகுறித்து அவர் தனது பேட்டியொன்றில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். வரும் டிசம்பரில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக இந்த ரோலில் சூர்யாவின் தம்பி கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த ரோலில் சூர்யாவின் தீவிர ரசிகரான துலகர் சல்மான் இணைந்துள்ளார். சூர்யா43 படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயினமெண்ட் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தை முடித்துவிட்டு, அவர் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விடுதலை 2 படத்தின் சூட்டிங்கில் வெற்றிமாறன் பிசியாக உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X