Dulquer Salmaan: நானும் சென்னை பையன்தாங்க.. பிடிச்ச ஹீரோ யார் தெரியுமா?.. துல்கர் சல்மான் பளீச்!
சென்னை: நடிகர் துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கிங் ஆஃப் கோதா.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்துக் கட்டி நடித்து வரும் துல்கர் சல்மான், இந்த மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

காதல் படங்களில் அதிகமாக நடித்துவந்த துல்கர் சல்மான், இந்தப்படத்தில் ஆக்ஷன் ஜானரில் நடித்துள்ளார். படத்தில் ரித்திகா சிங், அனிகா சுரேந்தர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
நானும் சென்னை பையன்தான் என துல்கர் சல்மான் உற்சாகம்: நடிகர் துல்கர் சல்மான், தமிழ், மலையாளம், இந்தி என அடுத்தடுத்த மொழிகளில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பான் இந்தியா ஸ்டாராக மட்டுமில்லாமல் இந்த மொழிகளில் லீட் கேரக்டர்களில் தனியாக நடித்தும் இவரது படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் சீதாராமம், சுப், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற ஹிட் படங்களை தெலுங்கு, இந்தி மற்றும் தமிழில் கொடுத்துள்ளார்.
தற்போது துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரித்திகா சிங், அனிகா சுரேந்தர் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கிங் ஆஃப் கோதா படம் வரும் ஓணம் பண்டிகையையொட்டி 24ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் என அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் சென்னையில் படத்தின் பிரமோஷனில் துல்கர் சல்மான் கலந்துக் கொண்டார்.
ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா படத்தை அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். காதல் படங்களில் அதிகமாக நடித்துவந்த துல்கர் சல்மான், இந்தப் படத்தின்மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் டீசரில் அவரது ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழிலும் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், தமிழ் ரசிகர்களும் படத்தை கொண்டாட காத்திருக்கின்றனர்.
இந்தப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், படம் குறித்தும் தமிழ் ரசிகர்கள் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார் துல்கர். நிகழ்ச்சியில் துலகரை காண அதிகமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தை பாராட்டிய துல்கர், ரஜினிக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளதாகவும் ஜெயிலரின் 1 சதவிகித ரசிகர்களை கவர்ந்தாலும் கிங் ஆஃப் கோதா மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கூறியுள்ளார்.
இதனிடையே தானும் ஒரிஜினல் சென்னை பையன்தான் என்று கூறியுள்ள துல்கர் சல்மான், சென்னையில்தான் தான் தன்னுடைய பள்ளிப்படிப்பை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் தான் வழக்கமாக சென்னையின் சத்யம் சினிமாஸ் மற்றும் எஸ்கேப் திரையரங்குகளில் படங்களை பார்ப்பேன் என்றும் கூறியுள்ளார். தான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகன் என்பதையும் ரசிகர்களிடையே பகிர்ந்துக் கொண்டார்.

சூர்யா -சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகவுள்ள சூர்யா43 படத்தில் துல்கர் சல்மான் கமிட்டாகியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து துல்கரிடம் கேள்விப்பட்டபோது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து தானும் இதுகுறித்து கேள்விப்பட்டேன் என்று நகைச்சுவையுடன் பேசினார். அவர் இந்தத் தகவலை மறுக்காத நிலையில், இந்தத் தகவல் உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் உளளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











