Lucky baskhar movie: எங்க இருந்து ஆரம்பிக்கலாம்.. துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் பட டீசர் ரிலீஸ்!

சென்னை: துல்கர் சல்மான் மலையாள பட நடிகராக இருந்த போதிலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடித்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான சீதாராமம் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து கிங் ஆப் கோதா படத்தில் அவர் நடித்திருந்தார். இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காமல் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதையடுத்து தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற படத்தில் நடித்துள்ளார் துல்கர் சல்மான். இந்த படத்தின் டீசர் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. படம் தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப்படம் வரும் ஜூலை மாதத்தில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Actor Dulquer salmaan s Lucky Baskhar movie teaser released today

நடிகர் துல்கர் சல்மான்: மலையாள நடிகராக இருந்த போதிலும் தமிழ். தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் துல்கர் சல்மான். முன்னதாக அவரது சீதாராமம் படம் தெலுங்கில் உருவாகி மற்ற மொழிகளிலும் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் தெலுங்கில் நடித்துள்ள படம் லக்கி பாஸ்கர். தனுஷின் வாத்தி படத்தை இயக்கி 100 கோடி ரூபாய் கிளப்பில் சேர்த்த இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

லக்கி பாஸ்கர் படம்: ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் பணம் படுத்தும் பாட்டை கதைக்களமாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது. படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த சூழலில் இன்றைய தினம் படத்தின் டீசர் ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏராளமான வியூஸ்களையும் பெற்று வருகிறது. இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

அடுத்தடுத்த படங்கள்: இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். முன்னதாக சீதாராமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் கிங் ஆப் கோதா படம் வெளியானது. இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காமல் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனிடையே கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் துல்கர் சல்மான் முக்கியமான கேரக்டரில் இணைந்திருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சினைகள் காரணமாக அந்த படத்திலிருந்து அவர் விலகினார். அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் துல்கர் சல்மான்.

லக்கி பாஸ்கர் பட டீசர் ரிலீஸ்: இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படம் தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம் இந்தி ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக வரும் ஜூலை மாதம் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் டீசர் தற்போது ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் வெளியாகியுள்ளது. வங்கியில் பணிபுரியும் சாதாரண மிடில் கிளாஸ் இளைஞராக படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X