Dulquer salmaan: நிற்காமல் வசூல் சாதனை செய்துவரும் லக்கி பாஸ்கர்.. 2 நாள் வசூலை அறிவித்த துல்கர்!

சென்னை: நடிகர் துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். பான் இந்தியா ஹீரோவாகவும் காணப்படும் துல்கர் சல்மான் படங்கள் பாலிவுட்டிலும் ரிலீசாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் உடல்நிலை காரணமாக கடந்த இரு ஆண்டுகளில் துல்கர் சல்மானின் ஒரே ஒரு படம் மட்டுமே ரிலீஸ் ஆனது. இதை தனது சமீபத்திய பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் துல்கர் சல்மான் நடிப்பில் தீபாவளி கொண்டாட்டமாக லக்கி பாஸ்கர் படம் இரு தினங்களுக்கு முன்பு பான் இந்தியா படமாக ரிலீசாகியுள்ளது. இந்த படம் தமிழில் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் துல்கர் சல்மானுக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படும் நிலையில் அவரது அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா படங்களாகவே ரிலீசாகி வருகின்றன.

dulquer salmaan lucky bhaskar movie tamil cinema


நடிகர் துல்கர் சல்மான்: மலையாளத்தில் முன்னணி நடிகராக அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் துல்கர் சல்மான்/ மலையாளத்தில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழிகளிலும் இவரை அடுத்தடுத்த படங்களில் இணைக்க இயக்குநர்கள் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தெலுங்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான சீதாராமம் படம் இவருக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. இந்த படத்தில் இவர் ராணுவ வீரராக நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் மிருணாள் தாகூருடன் துல்கர் சல்மானின் காதல், காவியமாக ரசிகர்களை கவர்ந்தது.

பான் இந்தியா ஹீரோ: சீதாராமம் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் இணைந்து வருகிறார் துல்கர் சல்மான். கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்திலும் இவர் இணையவிருந்த நிலையில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்த படத்தில் இருந்து விலகினார். இந்த படத்தை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் துல்கர் நடிப்பில் ஒரே ஒரு படம் மட்டுமே ரிலீசானது. இந்நிலையில் தற்போது தீபாவளி கொண்டாட்டமாக துல்கர் சல்மான் நடிப்பில் லக்கி பாஸ்கர் படம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான நிலையில் தமிழிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

லக்கி பாஸ்கர் படம்: லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மானின் மனைவியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ள நிலையில் அவருக்கும் இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் மிடில் கிளாஸ் நாயகனாக துல்கர் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியான இந்தப் படத்தின் கடந்த இரு தினங்களின் வசூலை துல்கர் சல்மான் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார். கடந்த இரு தினங்களில் இந்தப் படத்தின் சர்வதேச பாக்ஸ் ஆபிஸ் வசூல் 26,2 கோடிகளாக உள்ளதாகவும் படத்தின் வசூல் நிறுத்த முடியாமல் தொடர்ந்து வருவதாகவுலம் அவர் கூறியுள்ளார்.


2 நாள் வசூல்: இந்நிலையில் அடுத்தடுத்து இன்றும் நாளையும் விடுமுறை தினங்களாக இருப்பதால் இந்த படத்தை வசூல் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷின் வாத்தி படத்தை இயக்கி வெற்றிப்படமாக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் இருந்து மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ், நிவின் பாலி என அடுத்தடுதத ஹீரோக்கள் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நிலையில், அந்த லிஸ்ட்டில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே இணைந்துள்ள துல்கர் சல்மானுக்கு இந்தப் படமும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X