Dulquer salmaan: துல்கருக்கு லக்காக அமைந்த லக்கி பாஸ்கர் படம்.. 3 நாட்கள்ல இவ்வளவு வசூலா?

சென்னை: நடிகர் துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் இந்தியிலும் ஏராளமான ரசிகர்களை பெற்று பான் இந்தியா நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டமாக சில தினங்களுக்கு முன்னதாக இவரது லக்கி பாஸ்கர் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வசூலிலும் சிறப்பாக அமைந்து வருகிறது.

முன்னதாக தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லுரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் படம் உருவாகி ரிலீசாகியுள்ளது.. இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். அவரது நடிப்பும் படத்தில் மிகப் பெரிய பாராட்டுகளை ஏற்று வருகிறது. பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது.

dulquer salmaan lucky bhaskar movie venky atluri

நடிகர் துல்கர் சல்மான்: நடிகர் துல்கர் சல்மான் தமிழ்,. தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்து தென்னிந்திய மொழிகளில் சிறப்பான படங்களில் இணைந்து நடித்து வருகிறார். இவரது படங்கள் பாலிவுட்டிலும் மிகச் சிறப்பான கவனத்தை பெற்று வருகின்றன. பான் இந்தியா ஸ்டாராக அடுத்தடுத்த படங்களை வெளியிட்டு சக்சஸ் கொடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக இவரது லக்கி பாஸ்கர் படம் தீபாவளி கொண்டாட்டமாக ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. தமிழ் ரசிகர்களையும் இந்த படம் சிறப்பாக கவர்ந்து வருகிறது.

3 நாட்களின் வசூல்: பீரியட் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களில் இந்த படத்தின் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. கடந்த மூன்று நாட்களில் இந்த படம் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 40 கோடிகளை தாண்டி வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழிலும் இந்த படம் மிகச் சிறப்பான வசூலை பெற்று வருகிறது. தீபாவளி ரிலீஸ் படங்களில் அமரன் படத்தை தொடர்ந்து லக்கி பாஸ்கர் படம் மிகப்பெரிய அளவில் கவனத்தையும் வசூலையும் பெற்று வருகிறது.

லக்காக அமைந்த லக்கி பாஸ்கர்: சாதாரண நபரான படத்தின் ஹீரோ, அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதையாக லக்கி பாஸ்கர் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. துல்கர் சல்மானுக்கு மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். தெலுங்கில் இவரது சீதாராமம் படம் உருவாகி பான் இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய அளவில் மற்ற மொழிகளிலும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது லக்கி பாஸ்கர் படமும் அவருக்கு லக்காகவே அமைந்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் இந்த படத்தின் வசூல் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அதிகரித்த திரையரங்குகளின் எண்ணிக்கை: இதற்கு ஏற்றாற்போல தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ள இந்தப் படத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான், தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஓகே கண்மணி போன்ற படங்களின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். லக்கி பாஸ்கர் படத்திற்காக சென்னையிலும் இவர் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டார். தொடர்ந்து தனக்கு பிடித்தமான நடிகர் அஜித் என்பது உள்ளிட்ட பல விஷயங்களையும் ரசிகர்களிடையே பகிர்ந்துக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X