Dulquer salmaan: 100 கோடி கிளப்பில் இணைந்த லக்கி பாஸ்கர்.. மீண்டும் சாதித்த துல்கர் சல்மான்!

சென்னை: கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக தமிழில் அமரன், ப்ளடி பெக்கர், பிரதர் படங்கள் வெளியாகின. இவற்றுடன் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படமும் இணைந்து கொண்டது. பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான லக்கி பாஸ்கர் படம் ரசிகர்களை சர்வதேச அளவில் கொண்டாட செய்தது.

சாதாரண வங்கி ஊழியரின் சாதனை பயணமாக உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப்படம் வெளியான நிலையில் படத்தின் திரைக்கதை மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. படத்தின் வசூலும் சிறப்பாகவே அமைந்த நிலையில் படம் தற்போது திரைப்படத்தின் வசூல் சாதனையை படக்குழுவினர் உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளனர்.

dulquer salmaan lucky bhaskar movie 100 crore club

லக்கி பாஸ்கர் படம்: நடிகர் துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து நடித்து தன்னை பான் இந்தியா ஸ்டாராக உயர்த்திக் கொண்டுள்ளார். இவரது பல படங்கள் மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்துள்ளன. தமிழிலும் இவரது நடிப்பில் வெளியான ஓகே கண்மணி உள்ளிட்ட படங்கள் மிகச்சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்தன. இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் வெளியாகி உள்ளது லக்கி பாஸ்கர் படம். கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீசாக இந்த படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் மிகப்பெரிய வசூலை படம் குவித்துள்ளது.

100 கோடி கிளப்பில் இணைந்த லக்கி பாஸ்கர்: கடந்த தீபாவளி கொண்டாட்டமாக தமிழில் அமரன், பிரதர், ப்ளடி பெக்கர் மற்றும் இவற்றுடன் பான் இந்தியா படமாக வெளியான லக்கி பாஸ்கர் படங்கள் வெளியாகின. இவற்றில் அமரன் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து 250 கோடிகளை தாண்டி வசூலித்து வருகிறது. இந்நிலையில் இந்த படங்களின் வரிசையில் அடுத்ததாக லக்கி பாஸ்கர் படம் மிகச் சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்து தற்போது 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இது குறித்து படக்குழுவினர் உற்சாகத்துடன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர். படத்தின் கிளிப்பிங்குகளுடன் இந்த வீடியோ காணப்படுகிறது.

துல்கர் சல்மான் உடல்நல பாதிப்பு: கடந்த இரண்டு ஆண்டுகளாக துல்கர் சல்மான் நடிப்பில் ஒரே ஒரு படம் மட்டுமே வெளியான நிலையில் தற்போது லக்கி பாஸ்கர் அவருக்கு மீண்டும் பழைய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுக் கொடுத்துள்ளது. கடந்த சில மாதங்களாக தன்னுடைய உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் அதனால் தான் படங்களில் நடிப்பது தடைப்பட்டதாகவும் முன்னதாக பேட்டியொன்றில் துல்கர் சல்மான் கூறியிருந்த நிலையில் தற்போது அவர் தேறி உள்ளதாகவும் அதனால் அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்துக் கொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக தமிழில் கமல் மற்றும் சூர்யா ஆகியோருடன் துல்கர் நடிக்கவிருந்த தமிழ் படங்களில் அவர் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

லக்கியாக அமைந்த லக்கி பாஸ்கர்: இந்நிலையில் லக்கி பாஸ்கர் படம் துல்கர் சல்மான் லக்கியாகவே அமைந்துள்ளது. தமிழ் ரசிகர்களையும் இந்தப் படம் கொண்டாட செய்துள்ளது. முன்னதாக தமிழில் தனுஷின் வாத்தி படத்தை இயக்கியிருந்த பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் இந்தப்படம் உருவான நிலையில், இந்திய அளவில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்று முன்னதாக துல்கர் சல்மான் நம்பிக்கை தெரிவித்த நிலையில், அதை இந்தப் படம் சாத்தியமாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X