முதல் மனைவி இருக்கும் போதே 2வது திருமணம் செய்த நடிகர்.. விவாகரத்து கேட்டு மனு.. நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை: முதல் மனைவி நாகரத்னாவிடமிருந்து விவாகரத்து கோரி, கன்னட நடிகரும், இயக்குனருமான துனியா விஜய் தாக்கல் செய்த மனுவை மும்பை பெங்களூரு குடும்பநல நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இரண்டாவது முறையாக அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கன்னட நடிகரான துனியா விஜய் 1974 ஆண்டு கர்நாடகா மாநிலம் ஆனேக்கல் என்ற ஊரில் பிறந்தார். நடிகர் மற்றும் இயக்குனரான இவர், துனியா, சலகா, பீமா ஆகிய படங்களின் மூலம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இவர், 1999ம் ஆண்டு நாகரத்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், 2014ம் ஆண்டு அவரைவிட்டு பிரிந்து, விவாகரத்து பெறாமலே இரண்டாவதாக கீர்த்தி கவுடா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Duniya Vijay

கன்னட நடிகர் துனியா விஜய்: இதையடுத்து, தனது முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்துத் கோரி பெங்களூரு சாந்திநகரில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் துனியா விஜய் மனு தாக்கல் செய்தார். தன்னை மனைவி கொடுமை செய்வதால் அவருடன் சேர்ந்து வாழ முடியாது என்றும், அதனால் விவாகரத்துத் வழங்குமாறும் மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதி துனியா விஜய்யின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Duniya Vijay

இரண்டாவது முறையாக மனு தள்ளுபடி: இவர் ஏற்கனவே 2013ம் ஆண்டு தனது மனைவியுடம் இருந்து விவாகரத்து கோரிய மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது, இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனுவும் இன்று மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய, நடிகர் துனியா விஜய்யனின் குடும்ப வழக்கறிஞர் விவாகரத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று துனியா விஜய்யிடம் கலந்து ஆலோசித்த பிறகு தான் முடிவு செய்ய முடியும், தற்போது அவர் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். விவாகரத்து பெறுவது குறித்து உயர் நீதிமன்றம் செல்லவும் வாய்ப்பு உள்ளது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X