Captain Miller : மிரட்டலுக்கு தயாரான ‘கேப்டன் மில்லர்’.. தனுஷுடன் இணைந்த டெரர் வில்லன்!
சென்னை : தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த டெரரான வில்லன் இணைந்துள்ளார்.
1930 மற்றும் 40ம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் படம் உருவாகி வருகிறது.
இதில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

நடிகர் தனுஷ் : நானே வருவேன், வாத்தி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் தனுஷின் பிறந்த நாளன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சாணிக் காயிதம், ராக்கி ஆகியப் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.
தீபாவளிக்கு ரிலீஸ் : ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வரும், இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக டி.ஜி. தியாகராஜன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒரே நேரத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. கமல்ஹாசனின் இந்தியன் 2, ரஜினிகாந்தின் ஜெயிலர் படங்கள் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தையும் தீபாவளிக்கு அதிரடியாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெரரர் வில்லன் : மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில், அமெரிக்க நடிகர் எட்வர்ட் சோனென்ப்ளிக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் எட்வர்ட் பாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர், இப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், எட்வர்ட் கேசரி, மணிகர்னிகா மற்றும் யம்லா பக்லா தீவானா ஆகிய படங்களில் அவர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
தனுஷின் 50வது படம் : இந்த படத்தின் பிரீ ரிலீஸ் விற்பனை 100 கோடி ரூபாய்களை நெருங்கியுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதனால் இந்த படத்தின் மீது மக்களுக்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு சன் பிக்சர்ஸின் D50 படத்தை ஆரம்பிக்கிறார் தனுஷ்


Click it and Unblock the Notifications











