Marimuthu: தலைவருக்கு எல்லாரும்தான் ஃபேன்ஸ்.. எதிர்நீச்சல் மாரிமுத்து உற்சாகம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகி பாசிட்டிவ் ரெவ்யூக்களை பெற்றுள்ளது.

பீஸ்ட் படத்தில் சொதப்பிய நெல்சன் இந்தப் படத்தில் சிறப்பான கம்பேக்கை கொடுத்துள்ளதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

படம் குறித்து ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் அதிகளவில் பாராட்டியுள்ளனர். படத்தின் செலிபிரிட்டி ஷோவில் பங்கேற்ற எதிர்நீச்சல் மாரிமுத்துவும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Actor Ethirneechal Marimuthu hails Rajini and his Jailer movie in Celebrity show

ரஜினி குறித்து எதிர்நீச்சல் மாரிமுத்து பாராட்டு: நடிகர்கள் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. சர்வதேச அளவில் அதிகமான வரவேற்பை பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் ஓடி வருகிறது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த சில படங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றுவந்த ரஜினிக்கு இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. அவர் இந்தக் கொண்டாட்டங்களை நேரில் பார்த்து மகிழ்ச்சி அடையாமல், இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனாலும் அவரது சார்பில் படத்தை, அதன் வெற்றியை அவர்கள் கொண்டாடி வருகின்னர். படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தரும் என்று முன்னதாகவே கணிக்கப்பட்டது.

கடந்த படத்தில் விஜய்யுடன் பீஸ்ட்டில் இணைந்திருந்தார் நெல்சன் திலீப்குமார். இந்தப் படம் அவருக்கு சொதப்பலாக அமைந்தது. சமூக வலைதளங்களில் அதிகமாக கலாய்க்கப்பட்டார். அந்த அவமானங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது ஜெயிலர் படத்தை சிறப்பாக கொடுத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தை பார்த்த ரஜினிகாந்த், படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தப் படம் தற்போது சர்வதேச அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னதாக படத்தின் செலிபிரிட்டி ஷோ நடத்தப்பட்டது. இதில் சினிமா பிரபலங்கள் மட்டுமில்லாமல் சின்னத்திரை பிரபலங்களும் அதிகளவில் பங்கேற்றனர். படம் குறித்த தங்களது பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியல் புகழ் மாரிமுத்து, ரஜினியையும் ஜெயிலர் படத்தையும் பாராட்டித் தள்ளியுள்ளார்.

Actor Ethirneechal Marimuthu hails Rajini and his Jailer movie in Celebrity show

தான் தலைவர் ரசிகர் என்று கூறிய அவர், அவருக்கு எல்லாரும்தான் ரசிகர்கள் என்றும் கூறினார். உலகத்தில் ரஜினிக்கு ரசிகர் இல்லாதவர் யாரும் இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். தான் கல்லூரியில் படிக்கும்போது, ரிலீசாகும் படங்களின் முதல் ஷோக்களை பார்த்ததாகவும் அப்போது வெளியான மிஸ்டர் பாரத், மாவீரன் படங்களை பார்த்து தான் ரஜினி ரசிகராக மாறியதாகவும் மாரிமுத்து கூறியுள்ளார்.

நன்றாக நடிக்கும் அனைவருக்கும் தான் ரசிகன்தான் என்றும் தனக்கு ரஜினியை மட்டுமில்லாமல் கமலையும் மிகவும் அதிகமாக பிடிக்கும் என்றும் மாரிமுத்து மேலும் கூறியுள்ளார். இந்த ஷோவில், சினேகன், கன்னிகா, மாகாபா உள்ளிட்ட பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டு படம் பார்த்து, தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர். மாகாபா, ரோபோ சங்கர் போன்றவர்கள் ரஜினி போல பேசி அசத்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X