Actor Rajinikanth: ரஜினிக்கு மகனாக களமிறங்கும் பகத் பாசில்.. அதிரடி வில்லத்தனம் காட்டும் ராணா!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் ஞானவேல் இயக்கத்தில் அவரது 170வது படமாக உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களாக தொடர்ந்துவரும் நிலையில் இன்னும் ஒரு மாதத்தில படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளது.

Actor Fahad Fasil going to act Rajinikanths Son in Vettaiyan movie

படத்தின் டைட்டில் கடந்த 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளையொட்டி டீசருடன் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்துள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த நிலையில் படத்தின் வெற்றியை ரஜினி, நெல்சன், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருடன் அவர்கள் கொண்டாடித் தீர்த்துள்ளனர். பீஸ்ட் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தை இயக்கியிருந்த நெல்சன், ரஜினி, சன் பிக்சர்ஸ் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார். இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

சாதுவாகவும் சேதுவாகவும் ரஜினி: இந்தப் படத்தில் சாதுவாகவும் அதே சமயம் தன்னுடைய மகன் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக கிடைக்கும் தகவலால் சேதுவாகவும் மாறும் ரஜினிகாந்தை அடுத்தடுத்து பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தர். வழக்கமான பழிவாங்கும் கதைக்களம்தான் என்ற போதிலும் படத்தின் திரைக்கதை, காட்சி அமைப்புகள் மற்றும் படத்தில் இடம்பெற்ற நடிகர்கள், அனிருத்தின் இசை போனற்வை இந்தப் படத்தை மாஸ் ஆக்கியிருந்தது.

ஜெயிலர் படம்: பான் இந்தியா படமாக வெளியான ஜெயிலர் படத்தில் ஒவ்வொரு மொழியிலிருந்தும் முன்னணி நடிகர்கள் களமிறக்கப்பட்டனர். மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என இந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் தங்களது கேரக்டருக்கு நியாயம் செய்திருந்தனர். படமும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து 600 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்துள்ளது.

வேட்டையன் படம்: இந்தப் படத்தை தொடர்ந்து ஞானவேல் இயக்க்த்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களாக நடந்துவரும் சூழலில் இன்னும் ஒரு மாதத்தில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துவரும் சூழலில் அவருக்கு மகனாக பகத் பாசில் நடித்து வருவதாகவும் அவரது மனைவியாக துஷாரா விஜயன் நடித்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டீசண்ட் வில்லனான ராணா: இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக ராணா நடித்துவரும் நிலையில் சமீபகாலங்களில் அதிகமாக கொடூரமாக காட்டப்படும் வில்லன்களை போல இல்லாமல், ராணா இந்தப் படத்தில் டீசண்டான வில்லனாக நடித்துவருவதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ரஜினியின் முந்தைய படமான ஜெயிலர் படத்தில் அதிபயங்கரமான வில்லனாக விநாயகன் நடித்திருந்த நிலையில், அதுபோல இல்லாமல் ராணாவிற்கு மிகவும் டீசண்டான கேரக்டர் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X