Fahad Fasil: அரவிந்த் சாமியின் சித்தார்த் அபிமன்யூ ரோல்.. தனி ஒருவன் 2 வில்லன் இவரா?

சென்னை: நடிகர் ஜெயம்ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி என முன்னணி நடிகர்கள் இணைந்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது தனி ஒருவன்.

எப்போதும் ரீமேக் படங்களையே இயக்கி வருவதாக எழுந்த விமர்சனத்தை தகர்க்கும்வகையில் தனி ஒருவன் படத்தை கொடுத்திருந்தார் மோகன் ராஜா.

இந்நிலையில் 8 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள தனி ஒருவன் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Actor Fahad fasil going to do Villain role in Jayam Ravis Thani Oruvan 2 movie?

தனி ஒருவன் 2 படத்தில் வில்லனாக களமிறங்கும் மாஸ் நடிகர்: நடிகர் ஜெயம் ரவியின் கேரியர் அவரது அண்ணன் இயக்கத்தில் உருவான ஜெயம் படத்தில்தான் துவங்கியது. தொடர்ந்து மற்ற முன்னணி இயக்குநர்களின் டைரக்ஷனிலும் நடித்து தன்னை மாஸ் ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். அவரது அண்ணன் இயக்கத்திலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது தனி ஒருவன் படம். எப்போதுமே ஒரு படத்தின் வெற்றிக்கு ஹீரோ, ஹீரோயின் மட்டுமில்லாமல் வில்லனும் முக்கியமானவர் என்பதை இந்தப் படம் சிறப்பாக வெளிப்படுத்தியது.

படத்தில் மித்ரன் என்ற கேரக்டரில் போலீஸ் அதிகாரியாக மாஸ் காட்டியிருந்தார் ஜெயம் ரவி. மிகவும் அழுத்தமான கேரக்டரில் அவருக்கு இந்தப் படம் அமைந்தது. இதேபோல படத்தில் நாயகியாக நடித்திருந்த நயன்தாராவிற்கும் இந்தப் படம் கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது. இதனிடையே படத்தில் சித்தார்த் அபிமன்யு என்ற கேரக்டரில் நடித்திருந்தார் அரவிந்த் சாமி. இந்தக் கேரக்டர் வில்லன் கேரக்டர்களில் சிறப்பாக அமைந்தது. அவரது நடிப்பு, ஸ்டைலிஷ் லுக் போன்றவை இந்த கேரக்டருக்கு வலு சேர்த்தது.

தொடர்ந்து ரீமேக் படங்களையே இயக்கி வருவதாக தன்மீது எழுந்த விமர்சனத்தில் இருந்து வெளிவரும்வகையில் தனி ஒருவன் படத்தை இயக்கியிருந்தார் மோகன் ராஜா. ஜெயம் ரவிக்கு மட்டுமில்லாமல் மோகன் ராஜாவிற்கும் தனி ஒருவன் படம் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது. ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜெயம் ரவிக்கு, இந்தப் படம் மிகச்சிறப்பாக அமைந்து, அவருடைய கேரியர் பெஸ்ட் படங்களில் ஒன்றாக அமைந்தது-

இந்நிலையில் இந்தப் படத்தின் 8 ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை படக்குழுவினர் சமீபத்தில் ரசிகர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் நீண்ட நாட்களாக அறிவிப்புடன் நின்றிருந்த தனி ஒருவன் 2 படம் விரைவில் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் அறிவித்தனர். படத்தில் ஜெயம் ரவியின் அதிரடியான அறிவிப்பு வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த வீடியோவில் வில்லன் குறித்த கேள்விக் குறியுடன் முடிக்கப்பட்டிருந்தது.

Actor Fahad fasil going to do Villain role in Jayam Ravis Thani Oruvan 2 movie?

இந்தப் படத்தில் அரவிந்த் சாமி வில்லன் கேரக்டரில் நடிக்காத நிலையில், இந்த அறிவிப்பு வீடியோவிற்கு அவர் பாராட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தப் படத்தில் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் நயன்தாராவே ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கேள்விக்குறியுடன் அறிவிப்பு வீடியோவில் நிறுத்தப்பட்டுள்ள தனி ஒருவன் 2 படத்தில் வில்லனாக பகத் பாசில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாளம், தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ் படங்களிலும் அதிரடி ரோல்களில் நடித்து வருகிறார் பகத் பாசில். குறிப்பாக இவரது நடிப்பு விக்ரம், மாமன்னன் போன்ற படங்களில் மிகவும் சிறப்பாக அமைந்தது. அடுத்தடுத்த தமிழ் படங்களில் கமிட்டாகிவரும் பகத் பாசில், தனி ஒருவன் படத்தில் நடிக்கவுள்ளது ரசிகர்களுக்கு மிகவும் சிறப்பான தகவலாகவே அமையும். முதல் பாகத்தில் இந்தப் படத்தின் வில்லன் ரோல் மிகவும் சிறப்பாக அமைந்த நிலையில், 2வது பாகத்திலும் அதை ஜெயம் ராஜா நிகழ்த்திக் காட்டுவார் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X