LCU-இணைகிறதா லியோ படம்.. படத்தில் இணைந்த சூப்பர் ஹீரோ!

சென்னை : நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ. இந்தப் படத்தில் விஜய் -லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.

மிகுந்த திட்டமிடலுடன் இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்ரீல் கடந்த 50 நாட்களாக எடுக்கப்பட்ட நிலையில் தற்போது படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர்.

இன்னும் சில தினங்களில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னையில் துவங்கவுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் சூட்டிங் நடத்தப்பட்டு, அடுத்த மாதத்திற்குள் சூட்டிங்கை முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

லியோ படம்

லியோ படம்

நடிகர் விஜய், த்ரிஷா, கவுதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது லியோ படம். விஜய்யின் 67வது படமான லியோவில், இரண்டாவது முறையாக விஜய் -லோகேஷ் கூட்டணி இணைந்துள்ளது. முன்னதாக இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்யின் கேரக்டர், குடிகாரனாக, வித்தியாசமாக அமைந்தது. அவர் குடியை விட்டுவிட்டு மாறுவதற்கான காரணமும் அழுத்தமாக அமைந்தது.

காஷ்மீர் சூட்டிங் நிறைவு

காஷ்மீர் சூட்டிங் நிறைவு

இந்நிலையில் அடுத்ததாக தற்போது லியோ படத்தின் சூட்டிங் கடந்த 50 நாட்களாக காஷ்மீரில் கடுமையான குளிருக்கிடையில் நடைபெற்று முடிந்துள்ளது. சூட்டிங்கின்போது நிலநடுக்கமும் ஏற்பட்ட நிலையில், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக படக்குழுவினர் அப்டேட் தெரிவித்தவுடன்தான் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் மிகுந்த திட்டமிடலுடன் படத்தின் சூட்டிங்கை எடுத்துவருகிறார் லோகேஷ் கனகராஜ்.

சிறப்பான திட்டமிடல்

சிறப்பான திட்டமிடல்

காஷ்மீரிலும் மிஷ்கின், கவுதம் மேனன், சஞ்சய் தத் என ஒவ்வொருவரின் சூட்டிங்கையும் சிறப்பாக திட்டமிட்டு நடத்தி அவர்களை காஷ்மீரிலிருந்து அனுப்பினார். அவர்களும் லோகேஷ் மற்றும் விஜய்க்கு பாராட்டு தெரிவித்தனர். இந்தப் படத்தில் கேங்ஸ்டராக விஜய் நடித்து வருவதாக முன்னதாக லோகேஷ் அப்டேட் தெரிவித்திருந்த நிலையில், விஜய்யை இந்த மாதிரியான கேரக்டரில் பார்த்து ரசிக்க அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

லியோ படத்தில் பகத் பாசில்?

லியோ படத்தில் பகத் பாசில்?

விக்ரம் படத்தை தொடர்ந்து லியோ படமும் LCUவில் இணையுமா என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து வாய் திறக்காமல் மவுனம் சாதித்து வருகிறார் லோகேஷ். இந்நிலையில் விக்ரம் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்த பகத் பாசில் லியோ படத்தில் இணைந்துள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இதையடுத்து இந்தப் படம் கண்டிப்பாக LCUவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் ஸ்ட்ரிக்ட்

லோகேஷ் கனகராஜ் ஸ்ட்ரிக்ட்

லியோ படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து படக்குழுவினரால் வெளியிடப்பட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தின் அப்டேட்டை வெளியிடக்கூடாது என்பதில் மிகவும் ஸ்ட்ரிக்டாக உள்ளதாக இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். ஆனால் படத்தின் மற்ற விஷயங்களை படக்குழுவினர் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். விஜய்யின் அடுத்தடுத்த வீடியோக்கள் வெளியாகி படத்தில் அவரது கெட்டப் குறித்த அப்டேட்டை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.

அடுத்தடுத்த வீடியோக்கள்

அடுத்தடுத்த வீடியோக்கள்

காஷ்மீர் சூட்டிங்கை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய படக்குழுவினர், காஷ்மீரில் கடுங்குளிருக்கிடையில் எப்படியெல்லாம் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு சூட்டிங் நடப்பதற்காக உழைத்தனர் என்பது குறித்த வீடியோவை வெளியிட்டனர். லோகேஷ் கனகராஜும் தனிப்பட்ட முறையில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு லியோ சூட்டிங் குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை மட்டும் படக்குழுவினர் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். ஆனால் LCU போன்ற விஷயங்களில் லோகேஷ் மவுனம் சாதித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X