மாரி செல்வராஜ் படத்தில் இணைகிறார் பிரபல மலையாள நடிகர்!

சென்னை : பரியேறும் பெருமாள், கர்ணன் என இரண்டு வெற்றிப் படங்களுக்குப் பிறகு அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படம் பிரபல கபடி வீரரின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் இணையும் புதிய திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைகிறார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

மிகப்பெரிய வெற்றி

மிகப்பெரிய வெற்றி

பரியேறும் பெருமாள் என்ற தரமான படத்தைக் கொடுத்து அனைவரையும் முதல் படத்திலேயே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன்ஸ் தயாரித்திருந்த பரியேறும் பெருமாள் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. சர்வதேச அளவிலும் பல விருதுகளை வாங்கிக் குவித்த இப்படம் தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் படங்களில் ஒன்றாக அமைந்தது.

உணர்ச்சி பூர்வமாக

உணர்ச்சி பூர்வமாக

அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். தமிழகத்தில் நடந்த உண்மை கலவர சம்பவத்தை மையமாக கொண்டு உருவான கர்ணன் திரைப்படமும் மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்ததால் இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்று இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது. இவ்வாறு முதல் இரண்டு வெற்றிகளை கொடுத்த மாரி செல்வராஜ் ஹாட்ரிக் வெற்றிக்காக அடுத்ததாக பிரபல தமிழக கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளார்.

Recommended Video

Thanu Sirஇன் தியாகம் அதிகம் | Mari Selvaraj Talk | FILMIBEAT TAMIL
கபடி வீரராக துருவ்

கபடி வீரராக துருவ்

ஆதித்ய வர்மா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான துருவ் விக்ரம் இப்பொழுது அப்பா விக்ரமுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து மாரி செல்வராஜின் படத்தில் கபடி வீரராக துருவ் நடிக்கிறார். இப்படத்திற்கு என தனியாக கபடி பயிற்சியையும் மாரிசெல்வராஜ் முன்னணியில் துருவ் விக்ரம் மேற்கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த நிலையில் மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கும் திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

பகத் பாசில்

பகத் பாசில்

துருவ் படத்திற்கு முன்பாகவே இப்படத்தின் பணிகள் தொடங்க இருக்க குறுகிய கால கட்டத்தில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. வேலைக்காரன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பகத் பாசில் இப்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். தற்போது மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் இணையும் புதிய திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X