அடுத்த படத்துலயும் பகத் இருக்காரு... லோகேஷ் சொன்ன சீக்ரெட்.. துள்ளி குதித்த நஸ்ரியா!

சென்னை : நடிகர் பகத் பாசில் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்த மொழிகளில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருந்த விக்ரம் படம் கடந்த மாதத்தில் வெளியானது.

இந்தப் படத்தில் பகத் பாசிலின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகர் பகத் பாசில்

நடிகர் பகத் பாசில்

நடிகர் பகத் பாசில் மலையாள நடிகராக இருந்தாலும் அதில் மட்டுமே நடிக்காமல், தெலுங்கு, தமிழ் என ஒரு வலம் வந்துக் கொண்டிருக்கிறார். அல்லு அர்ஜுனுடன் அவர் நடித்திருந்த புஷ்பா படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. அதில் காவல் அதிகாரியாக நடித்து மிரட்டியிருந்தார் பகத்.

 விரைவில் சூட்டிங்

விரைவில் சூட்டிங்

இந்தப் படம் சூப்பர் ஹிட்டான நிலையில் விரைவில் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான சூட்டிங் துவங்கவுள்ளது. இதில் பகத் பாசில் இணையவுள்ளார். படத்தில் விஜய் சேதுபதியும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

 விக்ரம் படம்

விக்ரம் படம்

இந்தப் படமும் முதல் பாகத்தை போலவே மிகவும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பகத் பாசில் நடிப்பில் கடந்த மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது விக்ரம் படம். இந்தப் படத்தில் மிகவும் வெயிட்டான கேரக்டர் பகத் பாசிலுக்கு அமைந்தது.

வாய்ப்பை பயன்படுத்திய பகத்

வாய்ப்பை பயன்படுத்திய பகத்

தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டார் பகத். இந்தக் கேரக்டர் மற்றும் அவரது மனைவியாக நடித்த காயத்ரி கேரக்டர் இரண்டும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக பகத்திற்கு அதிகமான காட்சி அமைப்புகள் இருந்த நிலையில், கேரள ரசிகர்கள் படத்தை கொண்டாடினர்.

மலையன்குஞ்சு படம்

மலையன்குஞ்சு படம்

இந்நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் நடித்துள்ள மலையன்குஞ்சு படம் இம்மாதம் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் பிரமோஷன் பணிகளில் தற்போது பகத் பாசில் ஈடுபட்டுள்ளார். அவரே இந்தப் படத்தை தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

லோகேஷ் அடுத்தபடத்தில் பகத்

லோகேஷ் அடுத்தபடத்தில் பகத்

இதனிடையே அவர் தன்னுடைய அடுத்த படத்தில் மீண்டும் இணையவுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் அவரது மிரட்டலான நடிப்பையடுத்து மீண்டும் அவருடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக லோகேஷ் தெரிவித்துள்ளார்.

துள்ளி குதித்த நஸ்ரியா

துள்ளி குதித்த நஸ்ரியா

இதுகுறித்து தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், பகத்தின் மனைவி நஸ்ரியா, மீண்டும் லோகேஷ் -கமல் கூட்டணி எப்போது நடக்கும் என்று கேட்கிறார். வீடியோ கால் மூலம் இதற்கு பதிலளிக்கும் லோகேஷ், மீண்டும் அனைவரும் இணையவுள்ளது குறித்து உறுதிப்படுத்துகிறார்.

 தளபதி 67ல் பகத்?

தளபதி 67ல் பகத்?

இதைக் கேட்கும் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்கின்றனர். இந்த வீடியோ ரசிகர்களால் மிகவும் சிறப்பாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து பகத் பாசில் தளபதி 67 படத்தில் இணைகிறாரா என ரசிகர்கள் ஆர்வமுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவில் இதற்கான விடை கிடைக்கும் என்று நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X