Director Siddique - உங்களை எப்போதும் மிஸ் செய்வேன் சித்திக் சார்.. உருகிய ஃபகத் பாசில்

திருவனந்தபுரம்: Director Siddique (இயக்குநர் சித்திக்) இயக்குநர் சித்திக் மறைவுக்கு நடிகர் ஃபகத் பாசில் தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.

மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் பிரபலமான இயக்குநராக இருந்தவர் சித்திக். மலையாளத்தில் தனது கரியரின் ஆரம்பத்தில் ஃபாசிலிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு லாலுடன் இணைந்து ஏராளமான படங்களுக்கு கதை எழுதியும், ஏராளமான படங்களை இயக்கியும் வெற்றி கண்டார். மலையாளம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் படங்கள் இயக்கினார். இதன் காரணமாக இந்தியா முழுவதும் அறியப்படும் இயக்குநராக விளங்கினார் சித்திக்.

Actor Fahadh Faasil has expressed his condolences on the death of director Siddique

சூப்பர் ஹிட் இயக்குநர்: லாலுடன் இணைந்து படங்கள் இயக்கிவந்த அவர் தனியாக ஹிட்லர் என்ற படத்தை முதன்முறையாக இயக்கினார். அந்தப் படம் ஹிட்டடிக்க தொடர்ந்து தனியாகவே முத்திரை பதிக்க ஆரம்பித்தார்.அதன்படி அவர் ஜெயராம் உள்ளிட்டோரை வைத்து இயக்கிய ப்ரெண்ட்ஸ்ட் படம் மெகா ஹிட்டானது. அந்தப் படத்திலிருந்து சித்திக் சிறந்த காமெடி பட இயக்குநர் என்ற பெயரையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மலையாளத்தில் பல படங்கள் இயக்கினார்.

தமிழில் சித்திக்: தமிழில் அவர் ப்ரெண்ட்ஸ், எங்கள் அண்ணா, சாது மிரண்டா, காவலன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் சாது மிரண்டா, பாஸ்கர் ஒரு ராஸ்கர் ஆகிய படங்களைத் தவிர்த்து அனைத்து படங்களுமே மெகா ஹிட்டானவை.குறிப்பாக ப்ரெண்ட்ஸ் படம் எல்லாம் இப்போது டிவியில் போட்டாலும் பலர் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு ஒரு சீனிலிருந்துகூட கண்களை அகற்றாமல் முழு படத்தையும் பார்த்து முடிப்பார்கள்.

வடிவேலு காமெடி: தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த காமெடியன்களில் வடிவேலு ஒருவர் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை. அவரது காமெடியை எடுத்துக்கொண்டா அதில் ப்ரெண்ட்ஸ் படமும், எங்கள் அண்ணா படமும் டாப் 5க்குள் இருக்கும். அப்படிப்பட்ட காமெடி காட்சிகளை சித்திக்கும் உருவாக்கி; வடிவேலு அதை டெவலப் செய்வதற்கும் சுதந்திரம் கொடுத்தார். அதனால்தான் காவலன்வரை அந்த பந்தம் நீடித்தது.

சித்திக் காலமானார்: அவர் கடைசியாக மலையாளத்தில் பிக் பிரதர் படத்தை இயக்கினார். அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து மூன்று வருடங்கள் படம் எதுவும் பண்ணாமல் இருந்த அவருக்கு நிமோனியா மற்றும் கல்லீரல் பிரச்னை வந்தது. தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

ஃபகத் பாசில் இரங்கல்: இந்நிலையில் அவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் ஃபகத் பாசில், "அன்பே சித்திக்கா உங்களை எப்போதும் மிஸ் செய்வேன். எனது குடும்பத்துக்கு நீங்கள் அளித்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றியை சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. அழகான நினைவுகளை கொடுத்ததற்கு நன்றி. நீங்கள் மட்டுமின்றி உங்களது புன்னகையும் எனது இதயத்தில் எப்போதும் நிலைத்திருக்கும்" குறிப்பிட்டுள்ளார். சித்திக் ஃபகத்தின் தந்தையான ஃபாசிலிடம் உதவி இயக்குநராகத்தான் தனது கரியரை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X