டவுட்டே வேண்டாம்.. கூலி எல்சியூ படம்தான்! சூப்பர் ஸ்டாரோடு இணைந்த விக்ரம் பட நடிகர்!

By Mohanraj

சென்னை: ஜெயிலர் படம் கொடுத்த பிரமாண்டமான வசூல் வெற்றிக்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமிட்டான திரைப்படம் வேட்டையன். இயக்குநராக தனது முதல் படமான ஜெய் பீம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தமிழக அரசியல் சூழலிலேயே அதிர்வை ஏற்படுத்திய இயக்குநர் தா.செ. ஞானவேல் தான் வேட்டையன் படத்தை இயக்குகின்றார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.

Rajinikanth Vettaiyan

சென்னை மும்பை திருநெல்வேலி திருவனந்தபுரம் என இந்தியாவின் பல்வேறு இடங்களில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நிறைவு பெற்றது. இதை அடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. படம் ஏற்கனவே அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது என லைகா நிறுவனம் தெரிவித்திருந்தது.

Rajinikanth Vettaiyan

கூலி: வேட்டையன் படத்தில் நடித்து முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதன் பின்னர் கமிட்டான தனது 171 வது படமான கூலி படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கும் என ஏற்கனவே செய்திகள் வெளியாகின. மேலும் கூலி படத்தில் ரஜினிக்கு வில்லனாக சத்யராஜ் நடிக்கிறார் என்ற தகவலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஜினி படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்துவரும் அனிருத்தே இந்த படத்திற்கும் இசையமைக்கின்றார்.

Rajinikanth Vettaiyan

எல்.சி.யூ தான்: இந்நிலையில் கூலி படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்கின்றார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகின்றது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் ஃபகத் ஃபாசில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த படத்தில் இவர் நடிக்கவுள்ள தகவலால், கூலி திரைப்படமும் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அடங்கக்கூடிய படம்தான் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஏற்கனவே எல்சியூ பட வரிசையில் கைதி, விக்ரம் மற்றும் லியோ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஃபகத் ஃபாசில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வேட்டையன் படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் படங்களில் ஃபகத் ஃபாசில் நடிப்பதால் இரண்டு படங்களிலும் வேட்டையன் படத்தில் என்ன மாதிரியான கதாப்பாத்திரம் என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.

Rajinikanth Vettaiyan

கமல் நடிக்கிறாரா? லியோ படத்தில் கமல் ஹாசன் பேசுவது போன்ற காட்சி க்ளைமேக்ஸில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த படத்திலும் கமல் ஹாசன் நடிக்க அதிக வாய்ப்புள்ளது எனவும் பேசப்படுகின்றது. இதுமட்டும் இல்லாமல் எல்.சி.யூவின் மையக் கதாபாத்திரமே கமல் ஹாசனின் விக்ரம் கதாபாத்திரம்தான் என்பதால் கூலி படத்திலும் கமல் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. ரஜினி மற்றும் கமல் ஆகியோரை இணைக்கும் பாத்திரமாக ஃபகத் ஃபாசில் கதாபாத்திரம் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.

Rajinikanth Vettaiyan
Rajinikanth Vettaiyan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X