ரஜினிகாந்தின் கூலி படத்தை நிராகரித்த ஃபஹத் பாசில்? காரணம் என்ன தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக உருவாக உள்ள கூலிபடத்தில் ஃபஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் பரவிய நிலையில், இப்படத்தை அவர் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், வேட்டையன் படப்பிடிப்பை முடித்ததை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "கூலி" என்ற திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின், படப்பிடிப்பு 5ந் தேதி துவங்கியது. இப்படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மிஸ்டர் பாரத் படத்திற்கு பிறகு 38 வருடங்கள் கழித்து ரஜினியும் சத்யராஜும் கூலி படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இவர் இதற்கு முன் ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

Rajinikanth Coolie Fahadh Faasil

தங்க கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் நெகடிவ் கதாபாத்திரமாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த காலத்தில் ரஜினி நடித்த பல சூப்பர் ஹிட் படங்களை போல, இந்த படமும், ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்து ஒரு மாஸ் என்டர்டெயின்மெண்ட் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், இந்த படத்தில் ரஜினிகாந்த் இரண்டு விதமான கெட்டப்பில் நடிக்க இருப்பதாகவும், அது இரட்டை வேடமா, அல்லது இரண்டும் ஒரே ஆளா என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது.

தளபதி விஜய் நடித்த லியோ படத்திற்கு வந்த நெட்டிவ் விமர்சனத்தால், லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை எடுக்க அதிக நாட்கள் எடுத்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், லோகேஷின் விக்ரம், கைதி மற்றும் லியோ போன்ற படங்களை போல் LCU படமாக இல்லாமல் இது தனிப்படமாக இருக்கும் என்ற தகவலும் இணையத்தில் கசிந்துள்ளது.

பான் இந்திய திரைப்படமாக உருவாக உள்ள இந்த படத்தில ஃபஹத் பாசில் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவிய நிலையில் அவர் இந்த படத்தை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏராளமான படத்தில் கமிட்டாகி உள்ளதால், கால் ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இந்த படத்தை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஃபஹத்தை சந்தித்து பேசியபோதும், அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் அவர் நடித்து இருந்ததால், ஃபஹத் மற்றும் லோகேஷ் இடையே நல்ல உறவு இருந்தது. தற்போது அவர் கூலி படத்தை நிராகரித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் பகத் பாசில், ரஜினிகாந்த் இணைந்து வேட்டையன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன்: ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். லைகாவின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ள பஹத் பாசில் டப்பிங் பேசியிருக்கும் நிலையில், ரஜினியும் விரைவில் வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகளை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X