Fahadh Faasil: வாயில் கட்டுடன் வந்த ஃபஹத் பாசில்... தூமம் ஃபர்ஸ்ட் லுக்கே சும்மா மிரட்டுதே!

பெங்களூரு: மலையாள திரையுலகின் வெரைட்டியான நடிகர் ஃபஹத் பாசில் தற்போது பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வருகிறார்.

கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் தூமம் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

பவன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள தூமம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தூமம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Actor Fahadh Faasil starrer Dhoomam first look poster released

ஃபஹத் பாசிலின் தூமம் ஃபர்ஸ்ட் லுக்
இயக்குநர் பாசிலின் மகனாக திரையுலகில் அறிமுகமான ஃபஹத் பாசில், ஆரம்ப காலங்களில் மிக மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டார். அதன்பின்னர் நடிப்பில் விஸ்வரூபம் எடுத்த ஃபஹத் பாசில், தற்போது பான் இந்தியா ஸ்டாராக மிரட்டி வருகிறார். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் படங்களிலும் நடித்துள்ளார்.

மலையாளத்தில் தரமான ஹிட் படங்களை கொடுத்துள்ள ஃபஹத் பாசில், தமிழில் மாமன்னன், தெலுங்கில் புஷ்பா 2 படங்களில் நடித்து வருகிறார். அதேபோல், கன்னட இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில் தூமம் படத்திலும் நடித்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஃபஹத் பாசில் ஜோடியாக சூரரைப் போற்று புகழ் அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், தூமம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மிரட்டலாக உருவாகியுள்ள இந்தப் போஸ்டரில் ஃபஹத் பாசில் வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அவருக்குப் பின்னால் அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட மற்ற கேரக்டர்கள் நிற்கின்றன.

ஃபஹத் பாசிலின் மிரட்சியான கண்கள் தான் இந்த ஃபஸ்ட் லுக் போஸ்டரையே சிலிர்க்க வைத்துள்ளது. அதேபோல், போஸ்டர் முழுவதும் பிளாக் கலர் டோனில் இருப்பது, தூமம் படம் பக்கா சஸ்பென்ஸ் திரில்லர் ஜானராக இருக்கும் என லீட் கொடுத்துள்ளது. லூசியா, யூடர்ன் போன்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை இயக்கிய பவன்குமார் தான், தூமம் படத்தையும் இயக்கியுள்ளார். அதனால், இதுவும் ரசிகர்களுக்கு த்ரில்லர் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Fahadh Faasil starrer Dhoomam first look poster released

ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள தூமம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் ரிலீஸாகிறது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாகியுள்ள படக்குழு, தூமம் படத்தை மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாம். பூர்ணாசந்திரா தேஜஸ்வி இசையமைத்துள்ள தூமம் படத்திற்கு ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், ஃபஹத் பாசில் தமிழில் நடித்துள்ள மாமன்னன் திரைப்படமும் மே மாதம் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும், விக்ரம் படத்தில் நடித்திருந்த ஃபஹத், விஜய்யின் லியோவிலும் கேமியோ ரோலில் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X