Aavesham movie: 5 நாட்களில் அரைசதம்.. 50 கோடி வசூல்.. பட்டையை கிளப்பும் ஃபகத் பாசிலின் ஆவேஷம்!

சென்னை: நடிகர் ஃபகத் பாசில், புதுமுகங்கள் மிதுன் ஜெய்சங்கர், ஹிப்ஸ்டர், ரோஷன் ஷானவாஸ் ஆகியோருடன் களமிறங்கியுள்ளது ஆவேஷம் படம். கடந்த வாரத்தில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள இந்தப் படம் மற்ற படங்களை போலவே மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. பெங்களூருவின் தாதாவாக இதுவரை இல்லாத பாடி லேங்குவேஜுடன் இந்தப் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார் ஃபகத் பாசில்.

கேரளாவை சேர்ந்த மூன்று இளைஞர்கள், பெங்களூருவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சேர, அங்கு ராகிங் என்ற பெயரால் சீனியர் கேங்கால் அடித்து துன்புறுத்தப்படுகின்றனர். இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் பெங்களூருவில் தாதாவாக இருக்கும் ஃபகத் பாசிலின் நட்பை பெறுகின்றனர். தொடர்ந்து அவர்களின் எண்ணம் நிறைவேறியதா என்பதாக படத்தின் கதைக்களம் காணப்படுகிறது.

Actor Fahadh fasil s Aavesham movie collects 50 crores in just 5 days


ஆவேஷம் படம்: சமீபத்திய மலையாளப் படங்கள் தமிழ் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்து வருகிறது. அந்த பட்டியலில் அடுத்ததாக இணைந்துள்ளது ஃபகத் பாசில் லீட் கேரக்டரில் நடித்துள்ள ஆவேஷம். ரவுடி ஒருவரின் வாழ்க்கையில் 3 மாணவர்களின் சேர்க்கை என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்த ரவுடியாக ஃபகத் பாசில் நடித்துள்ளார். படத்தின் ஒட்டுமொத்த கதையையும் தன்னுடைய தோள்களில் தாங்குகிறார். கேரளாவை சேர்ந்த 3 மாணவர்களாக மிதுன் ஜெய்ஷங்கர், ஹிப்ஸ்டர், ரோஷன் ஷானவாஸ் ஆகியோரும் கவனம் ஈர்க்கின்றனர்.

ரவுடியாக ஃபகத் பாசில்: இவர்கள் மூவரும் பெங்களூருவை சேர்ந்த பொறியியல் கல்லூரியில் இணைய, அங்கே சீனியர்களால் ராக்கிங் என்ற பெயரில் அடித்து துன்புறுத்தப்படுகின்றனர். இதனால் அவர்களை பழிவாங்க லோக்கல் தாதா ஒருவரை அவர்களை தேட அவர்களுக்கு கிடைப்பவர்தான் ஃபகத் பாசில். அவருக்கே தெரியாமல், தங்களது திட்டத்தை அவர்கள் எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதே ஆவேஷம். ஒரேமாதிரி நகரும் திரைக்கதையில் ஃபகத் பாசிலின் என்ட்ரி மிகப்பெரிய பலமாக அமைகிறது. இதுவரை இல்லாதவகையில் இந்தக் கேரக்டரை ஏற்று அவர் சிறப்பாக கொடுத்துள்ளார்.

Actor Fahadh fasil s Aavesham movie collects 50 crores in just 5 days

காமெடி கலந்த தாதா: மூர்க்கம் கலந்த காமெடி தாதாவாக கவனம் ஈர்க்கிறார் ஃபகத் பாசில். படத்தில் ரங்கா என்ற இவரது கேரக்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல ரெட்டி என்ற கேரக்டரில் நடித்துள்ள மன்சூர் அலிகானும் ஸ்வீட் சர்ப்ரைஸ். இந்நிலையில் படம் கடந்த 5 நாட்களில் 50 கோடி ரூபாய்களை தாண்டி இந்தப் படம் வசூலித்துள்ளது. முன்னதாக பெண் கேரக்டர் இல்லாமல் ரோமாஞ்சம் என்ற படத்தை வெற்றிப்படமாக கொடுத்திருந்த ஜிது மாதவன், இந்தப் படத்திலும் அதே டெக்னிக்கை பயன்படுத்தியுள்ளார். படத்தின் மற்றொரு பலமாக சுஷின் ஷ்யாமின் இசையமைப்பும் இணைந்துக் கொள்கிறது.

ஜாலியான திரை அனுபவம்: கொண்டாட்ட மனநிலையுடன் சென்று பார்ப்பதற்கு இந்தப் படம் மிகச்சிறப்பான தேர்வாக கூறப்பட்டுள்ளது. பக்காவாக ஒரு ஜாலியான திரையரங்க அனுபவத்தை ஆவேஷம் படம் கொடுக்கிறது. ஆக்ஷன், காமெடி என கலந்துக்கட்டி ரசிகர்களுக்கு கொடுக்கிறது. க்ளைமேக்சின்போது ஃபகத் பாசிலின் ஆவேசமான நடிப்பு, சில துணை கேரக்டர்களின் அதிரடி என்ட்ரி, அம்மா சென்டிமெண்ட், ரங்காவின் ப்ளாஷ்பேக் காட்சிகள் என இந்தப் படத்தில் கொண்டாடுவதற்கு அதிகமான விஷயங்கள் இருந்தாலும், சில இடங்களில் நகர முடியாமல் திரைக்கதை தவிப்பதை தவிர்த்திருக்கலாம் என்ற விமர்சனத்தையும் படம் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X