உடல் நலக்குறைவு.. சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் திடீர் உயிரிழப்பு.. திரையுலகம் இரங்கல்!
பெங்களூரு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் திடீரென மரணமடைந்தார்.
பிரபல இந்தி நடிகர் ஃபாராஸ் கான். ஃபராப் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் இவர்.
அமர் அக்பர் அந்தோணி, டிஸ்கோ டான்சர் உட்படபல படங்களில் நடித்துள்ள இந்தி நடிகர் யூசுப் கானின் மகன் இவர்

துல்ஹான் பனூ
ஃபராஸ் கான், இந்தியில், பிரித்வி, லவ் ஸ்டோரி, மெஹந்தி, துல்ஹான் பனூ மெய்ன் தேரி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். சல்மான் கான் ஹீரோவாக அறிமுகமான மைனே பியா கியா படத்தில் ஹீரோவாக ஒப்பந்தமானவர் இவர்தான் என்று கூறப்படுகிறது.

உடல் நிலை பாதிப்பு
உடல் நிலை சரியில்லாததால் இவரால் செல்ல முடியவில்லை என்றும் பிறகு சல்மான் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்றும் பாலிவுட்டில் கூறுகிறார்கள். நடிகர் ஃபராஸ் கான் கடந்த ஒரு வருடமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது உடல் நிலை சமீபத்தில் மோசமடைந்தது.

நிதி நெருக்கடி
பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே, பொருளாதரப் பிரச்னையால் தவித்த அவர் குடும்பத்தினர் ஃபராஸ் கானின் சிகிச்சை செலவுக்காக நிதி திரட்ட தொடங்கினர்.

கோரி இருந்தார்
இதே போல், பிரபல இந்தி நடிகை பூஜா பட் தனது ட்விட்டரில் இவரின் சிகிச்சைக்கு நிதி உதவி வழங்குமாறு கோரி இருந்தார். இதையடுத்து இந்தி நடிகர் சல்மான் கான், உள்பட பலர் பராஸ் கானின் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கினார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பராஸ் கான் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 46.

பிரிந்து விட்டார்
இத்தகவலை இந்தி நடிகை பூஜா பட் உறுதிப்படுத்தியுள்ளார். 'ஃபராஸ் கான் பிரிந்துவிட்டார். இந்த செய்தியை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது நிதி உதவி வழங்கிய அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











