இந்தியில் ரீமேக் ஆகும் அருவி... கதாநாயகி யார் தெரியுமா?

சென்னை : கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான அருவி திரைப்படம் ரசிகர்களின் வாழ்த்து மட்டுமல்லாமல் விருது மழையிலும் நனைந்தது.

அதிதி பாலன் கதாநாயகியாக இதில் நடித்திருக்க அறிமுக இயக்குனர் அருண் பிரபு இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்த அருவி படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆக இதில் பிரபல பாலிவுட் இளம் நடிகை ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரீமேக் பணிகள்

ரீமேக் பணிகள்

தென்னிந்திய திரைப்படங்களுக்கு பாலிவுட்டில் செம டிமாண்ட்டாக தற்பொழுது மாறி இருக்க பல திரைப்படங்கள் இப்போது ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழில் வெளியான மாநகரம், கோலமாவு கோகிலா, விக்ரம் வேதா ஆகிய படங்கள் ரீமேக் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்க இந்த பட்டியலில் மாஸ்டர் படமும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

விருதுகளையும் வென்று குவித்தது

விருதுகளையும் வென்று குவித்தது

இளம் இயக்குனர்களின் வரவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் புதுப்புது கதைகள் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு வெளியாகிக் கொண்டு இருக்க கடந்த 2017-ம் ஆண்டு அறிமுக இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் வெளியான அருவி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி சக்கைபோடு போட்டதோடு திரையரங்குகளை பல நாட்கள் கலக்கியது. இந்த படம் இந்தியா உட்பட பல நாடுகளில் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் வென்று குவித்தது.

பாத்திமா சனா ஷேக்

பாத்திமா சனா ஷேக்

அதிதி பாலன் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்த இந்த திரைப்படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் அதே சமயம் சமூகத்தில் இன்றளவும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானது. அதிதி பாலன் நடிப்பு இதில் அனைவரையும் கவர்ந்து பாராட்டுக்களை பெற்றிருந்தது. அருவி இப்பொழுது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. ஆமீர் கானின் நடிப்பில் வெளியான தங்கல் படத்தில் மகளாக நடித்திருந்த பாத்திமா சனா ஷேக் இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.

அதிகாரப்பூர்வ தகவல்

அதிகாரப்பூர்வ தகவல்

இ.நிவாஸ் இயக்க இருக்கும் இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் ஃபெய்த் பிலிம்ஸ் விக்கி ரஜினி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு மத்தியில் நடைபெற இருப்பதாக இயக்குனர் , தயாரிப்பாளர், கதாநாயகி என அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அருவி படத்தை தமிழில் தயாரித்திருந்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்ஆர் பிரபு படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X